வழிபாடுகளின் போது கற்பூரம் காட்டி வணங்க சொல்வது ஏன்? ஆச்சர்ய தகவல்
By : Kanaga Thooriga
இந்து மரபில் அனைத்து இல்லங்களில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் பொருள்களுள் கற்பூரமும் ஒன்று. கடவுள் வழிபாட்டில் கற்பூரம் முக்கிய இடம் பிடிக்க காரணம் அதன் நறுமணம். கற்ப்பூரத்திலிருந்து எழும் நறுமணம் அந்ந்த இடம் முழுவதிலும் நல்ல அதிர்வுகளை நிரப்ப காரணமாக அமைகிறது.
ஒவ்வொரு நாளின் வழிபாட்டிலும் முக்கிய அங்கம் வகிக்கும் கற்பூரம் ஏற்றப்படும் போது அதன் நறுமணம் நம் வழிபாட்டின் சூழலையே மிகவும் தெய்வீகமானதாக மாற்றக்கூடியது. கற்பூரத்தை எரித்து நாம் வழிபடுவது நம் அகங்காரத்தை எரித்து நம்மை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக கருதப்படுகிறது. கற்பூரம் முழுமையாக எரிந்து அடங்குகிற போது அது இருந்த சுவடே இல்லாமல் இருப்பது போல.. நான் என்கிற தன்மை முழுமையாக அழிந்து போவதன் அடையாளமே கற்பூரம் ஏற்றி வழிபடுவதன் தார்பரியம்.
அதுமட்டுமின்றி கற்பூரம் எரிகிற போது அது எரிகிற கனலில் காற்றில் பரவும் சூடின் காரணமாக காற்றில் இருக்க கூடிய கிருமிகள் அழிந்து போகிறது. காற்றை சுத்திகரித்து செயல்படுவதால் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. கற்பூரத்தை நுகர்வதால் பலவிதமான நோய்கள் தீர்ந்து போவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூஜை முதல் தோல் பராமரிப்பு வரை, காற்றை சுத்திகரித்தல் என பல வகையான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு எண்ணையில் கற்பூரம் சேர்த்து சூடு செய்து அதனை ஆர வைத்து கால்களுக்கு மசாஜ் செய்து வர அவர்களுக்கு இருக்கும் பிரசவ கால அழுத்தங்கள் உடனடியாக விலகும்.
அதை போலவே இன்று வீடுகளில் எறும்புகளை விரட்ட பலவிதமான இரசாயன வஸ்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கற்பூரம் ஒரு கிருமி நாசினியாக செயல்படுவதால் பச்சை கற்பூரத்தை சற்று நீரில் கலந்து எறும்புகள் வரும் இடத்தில் தெளித்து வர எறும்புகளின் வருகை வெகுவாக குறையும்.
மற்றும் முகத்தில் உள்ள பருக்கள் வடுக்கள் ஆகியவற்றை போக்குவதற்கு சிறந்த தோல் பராமரிப்பானாகவும் செயல்படுகிறது. நல்ல தரமான தேங்காய் எண்ணை மற்றும் ஆலிவ் எண்ணை ஆகியவற்றில் மிகவும் தரம்மிக்க கற்பூரத்தை சேர்த்து முகத்தில் தடவி வர வடுக்கள் நீங்கும். மேலும் பல மருத்துவ குணங்களும் கற்பூரத்திற்கு உண்டு. சிறிய குழந்தைகளுக்கு சளியினால் ஏற்படும் தொல்லைகளை போக்கவும் கற்பூரம் சிறந்த வலி நிவராணியாக செயல்படுகிறது.
நம் முன்னோர்கள் ஒவ்வொரு சிறிய ஆன்மீக அம்சத்தையும் பரந்து விரிந்த பார்வையில் ஆராய்ந்தே நமக்கு சடங்குகளாக சம்பிர்தாயங்களாக வழங்கியுள்ளனர்.