மாங்காடு காமாட்சியம்மன்- புராணம் கூறும் கதை என்ன?
சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பற்றி காண்போம்.
By : Karthiga
சென்னையின் புறநகர் பகுதியில் மாங்காடு என்னும் இடத்தில் உள்ளது காமாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் சக்தியின் ரூபமான காமாட்சி அம்மன் குடி கொண்டுள்ளார். புராண கதைகளின் படி கைலாய மலையில் சிவனும் பார்வதியும் விளையாடிக்கொண்டிருக்கையில் தேவியின் கை சிவனின் கண்களை மூடிவிட்டது. உடனே உலகம் முழுவதும் இரண்டு போனதாம். தன் தவறை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாராம் பார்வதி தேவி.
பூலோகத்தில் பிறந்து தவம் செய்யுமாறு சிவன் பார்வதி தேவியிடம் கூறவே பார்வதி தேவியும் இந்த மாங்காடு தளத்தில் அவதரித்து பஞ்சாக்னி மூட்டி தவமிருந்துள்ளார். பின்னர் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அருள்பாலித்து அவரை காஞ்சிபுரத்தில் மணம் புரிந்துள்ளார். இந்த மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பார்வதி தேவி இடது காலில் நின்று இடது கையை தலைக்கு மேல் உயர்த்தியவாறு மறுகையில் ஜெபமாலைவுடன் ரௌத்திர பாவத்தோடு காட்சியளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.