நவகிரகங்களுக்கு அர்பணிக்க வேண்டியவை என்ன? அவ்வாறு செய்தால் நிகழும் அதிசயங்கள் !
By : Kanaga Thooriga
நம் கலாச்சாரத்தில் இறைவனுக்கு இணையாக வைத்து போற்றப்படுவது மற்றும் வழிபடப்படுவது நவகிரகங்கள் ஆகும். காரணம் மனிதர்களின் விதியில் அல்லது அவர்களது வாழ்கையில் நவகிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று நம்பபடுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் நன்மையை வேண்டி பல்வேறு வகையில் வழிபடப்படுகின்றன.
இந்த ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகம் நம் ஏழு நாட்களுடன் தொடர்புடையதாகவும், மற்ற இரண்டு கிரகங்கள் ராகு கேதுவும் ஆகும். கிரகங்கள் அமைந்திருக்கும் திசையை பொருத்தும் அது தொடர்புடைய தெய்வங்களை பொருத்தும் அவை நன்மை தருவதாகவும் அல்லது தீமை செய்வதாகவும் அமைகின்றன. அவைகளின் தசா, மஹாதசா, அந்தாரதசா போன்றவை ஒரு தனிமனித வாழ்வில் பெரும் தாக்கத்தை உருவாக்குகின்றன.
கிரகங்கள் சரியான இடத்தில் வலுப்பெற்றிருந்தால் ஆண்டியும் அரசனை தவிர்க்க முடியாது என்பது பழமொழி. அதே வேளையில் விதி வசத்தால் கிரகங்கள் நமக்கு சாதகமாக இல்லாத போது, அவற்றை முறையாக வழிபடுவதன் மூலம் அவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும்.
சூரிய கிரகம், நெருப்பின் அம்சமாக திகழும் இக்கிரகத்தை வழிபடுவதற்கு வெல்லம், சிவப்பு நிற பருப்புகள், குங்குமபூ, சந்தனம், கோதுமை ஆகியவை உகந்ததாகும். சூரிய கிரகத்தை முறையாக வழிபடுவதால் ஒருவருக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
சந்திர கிரகத்திற்கு அரிசி, பால், நெய், உப்பு, சர்க்கரை, முந்திரி மற்றும் வெள்ளை முள்ளங்கி ஆகியவை உகந்ததாக கருதப்படுகிறது. யாருக்கேனும் இருமல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் சந்திர கிரகத்தை வழிபடுவதன் மூலம் தீரும் என்பது நம்பிகை.
செவ்வாய் கிரகத்தின் அதிபதி அனுமன் ஆவார். வெல்லம் மற்றும் மாதுளை செவ்வாயை வழிபட உகந்ததாகும். புதன் கிரகத்தின் அதிபதியானவருக்கு பச்சை நிறம் உகந்தது ஆகும். பச்சை பருப்பு, பூசணி மற்றும் பச்சை நிற பழங்கள் ஏற்றதாகும் . புதனை வழிபடுவதால் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
வியாழன் கிரகத்திற்கு மஞ்சள் நிறம் ஏற்றதாகும். மஞ்சள் நிறத்திலான உணவு பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபடுவதன் மூலம் கிட்னி தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. சுக்கிரனுக்கு அரிசி, ஜவ்வரிசி, சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருட்கள் உகந்ததாகும்.
சனி கிரகத்திற்கு கருப்பு நிற பொருட்கள் மற்றும் ராகு கேது கிரகங்கள் நிழல் போன்றவை என்பதால் அவைகளுக்கு கருப்பு நிற உளுந்து, இனிப்பு ஆகியவை படைக்கலாம்.
Image : Pinterest