உங்கள் கனவில் சிவன் தோன்றினால் அக்கனவு உணர்த்தும் ஆச்சர்ய செய்தி என்ன?
By : G Pradeep
கனவுகள் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு ஆகும். சாஸ்திரத்தின் படி, சில கனவுகளுக்கு என்று சில அர்த்தங்களும், விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பலருக்கும் பலவிதமான கனவுகள் வருவதுண்டு உண்பதை போல், பிறப்பு, இறப்பு, பொன் பொருள் மற்றும் விலங்குகள் போன்ற பல விதமான கனவுகள் வருவதுண்டும்.
இதில் ஆன்மீக ரீதியான கனவுகள் ஒருவருக்கு வருகிறதெனில், அவர் மனம் நேர்மறை எண்ணத்தால் நிறைந்திருக்கிறது என்பது அடிப்படை. குறிப்பாக உங்கள் கனவுகளில் சிவலிங்கம், திரிசூலம் அல்லது பாம்பு போன்றவை வந்திருக்கின்றனவா? ஆம் எனில் அதற்கான விளக்கங்கள் இங்கே.
உங்கள் கனவில் சிவன் வருவது, தினசரி நீங்கள் தியானம் செய்ய வேண்டும் என்கிற செய்தியை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த பிறவியிலிருந்தே சிவன் மீது தேடல் இருக்கும் ஒருவருக்கு தான் சிவன் கனவில் வருவார் தென்படுவார் என்பது நம்பிக்கை. சிவலிங்கத்தை கனவில் பார்ப்பதென்பது வெற்றியை குறிக்கும். வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் தீரப்போவதன் அடையாளம். சிவலிங்கம் என்பது நிறைவை, முழுமையை குறிக்கும். எனவே உங்களுக்குள் முழுமை ஏற்படப் போவதன் அடையாளமாகவும் இது பார்க்கப்படுகிறது.
நீங்கள் கனவில் சிவன் மற்றும் பார்வதியை தம்பதி சமயந்தராக பார்க்க நேரிட்டால். பல புதிய வாய்ப்புகள் உங்கள் வாசல் வர காத்திருக்கிறது என்று அர்த்தம். வெகு விரைவில் நீங்கள் இலாபம், நல்ல பயணம், நிறைவான உணவு, வளம் ஆகிய செய்திகள் உங்களை எட்டுவதன் அடையாளம்.
அடுத்து ஒரு சிலரின் கனவில் சிவன் தாண்டவம் நிகழ்த்தும் காட்சி வருவதுண்டு. இதன் பொருள் நீங்கல் நிச்சயம் செல்வத்தை சேர்ப்பீர்கள் ஆனால் சிறிய போராட்டத்திற்கு பின் அவை நிகழும் என்று பொருள்.
கனவில் சிவனின் திரிசூலத்தை கண்டால் அது நம் முக்காலத்தை உணர்த்துவதாகும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தை இது உணர்த்துவதாக அமையும்.
அடுத்து சிவனின் சிரசிலிருக்கும் பிறையை கனவில் கண்டால், வாழ்வில் முக்கியமான முடிவினை எடுக்க உள்ளீர்கள் என்று பொருள். இந்த கனவிற்கும் உங்கள் கல்வி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது என்பது நம்பிக்கை.
சிவனின் சிரசிலிருந்து கங்கை பாயும் காட்சியை கனவில் கண்டால் உங்கள் ஆன்மா தூய்மையடைகிறது என்று பொருள். மேலும் அறிவு, செல்வம் மற்றும் அன்பு ஆகிய மூன்றும் உங்களுக்கு அளவின்றி கிடைக்கயிருக்கிறது என்று பொருள். ன