Kathir News
Begin typing your search above and press return to search.

புராணா காலத்திலிருந்து இன்று வரை உயிருடன் வாழும் அந்த ஏழு அதிசய மனிதர்கள் யார் ?

புராணா காலத்திலிருந்து இன்று வரை உயிருடன் வாழும் அந்த ஏழு அதிசய மனிதர்கள் யார் ?

புராணா காலத்திலிருந்து இன்று வரை உயிருடன் வாழும் அந்த ஏழு அதிசய மனிதர்கள் யார் ?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  29 Nov 2020 5:55 AM GMT

நம் மரபில் சிரஞ்சீவி பவ !! என வாழ்த்தும் வழக்கம் உண்டு. சிரஞ்சீவி என்றால் நீடுழி வாழ்க என பொருள் கொள்ளலாம். இதுவே சமஸ்கிருதத்தில் சிறந்த என்றால் நீடு என்றும் ஜீவி என்றால் வாழ்பவர் என்றும் பொருள். எனில் நம் புராணங்களின் படி, நம் இந்து மரபில் ஏழு சிரஞ்சீவிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஏழு சிரஞ்சீவிகளும், இந்த கலி யுகம் முழுவதும் வாழ்ந்து, சத்ய யுகத்தின் ஆரம்பம் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அந்த ஏழு சிரஞ்சீவிகளை குறித்து இங்கேயே காணலாம். மஹாபாரதத்தில் மஹா குருவான, துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன். பகவான் கிருஷ்ணரின் சாபத்தால் எந்த ரோகத்திலும் உயிர் நீங்காத சாபத்தை அஸ்வத்தாமன் பெற்றிருக்கிறார். இது போன்ற சிரஞ்சீவி நிலை துன்பமே எனினும், இவரம் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர் ஆவார்.

இறைவன் வாமன ரூபம் எடுக்க காரணமாக இருந்த மாவலி, மூன்று அங்குல ஐடா வேண்டிய பலி அல்லது மாவலி என அழைக்கப்படும் மன்னன் சிரஞ்சீவியாக வாழ்வதாக சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரம்,மஹாபாரதம் உருவாக்க காரணமா இருந்த முக்கிய காரணி இவர் தான். இவரே வேத வியாசர். இவரே மஹாபாரதத்தை உலகுக்கு வழங்கியவர். மேலும் வைஷ்ணவர்களின் பார்வையில் இவர் மஹா விஷ்ணுவின் மறு ரூபம் எனவும் சொல்லப்படுகிறது. ஐவரும் சிரஞ்சீவியே!

அடுத்து, ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரம். ராமனின் சரண் புகுந்த வாயு புத்திரர் பகவான் ஆஞ்சநேயர். இவர் இன்றும் வாழ்கிறார் என்பதற்கு அவ்வப்போது கூட சில தரவுகள் கூட கிடைத்த வண்ணமீ இருக்கின்றன.

மற்றோரு ராமாயண கதாபாத்திரம், விபீஷணன், இவர் ராவணன் தம்பி ஆவர். இவர் ஸ்ரீ ராமரிடம் பெற்ற வரமே இவரை சிரஞ்சீவி ஆகி இருக்கிறது. மற்றோரு மஹாபாரத கதாபாத்திரம், கிருபாச்சாரியார். இவராய் கிருபா எனவும் பாரத போரில் கெளரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தார். மற்றோருவர், மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான பகவான் பரசுராமர். இவ்வாறாக இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவ்களை எண்ணி தெளிவோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News