Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிலை வலம் வருவது எதற்காக?

கோவிலை வலம் வருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்

கோவிலை வலம் வருவது எதற்காக?

KarthigaBy : Karthiga

  |  7 Sep 2022 12:45 PM GMT

கோவில் தரிசனத்துக்கு போகும் இளைஞர்களிடம் பெரியவர்கள் கோவிலை வலம் வர மறந்து விடாதே என்று கூறுவதுண்டு. இதன் பின்னால் சிறப்பான ஓர் அர்த்தமும் சாஸ்திரமும் உண்டு காலையிலும் மாலையிலும் பொதுவாக உடற்பயிற்சி நிலைகளாக நாம் பழக்கப் படுத்தி உள்ளோம்.இது இயலாதவர்களுக்கு கோயில் தரிசனமும் கோயிலை வலம் வருவதும் நல்ல உடற்பயிற்சியாக அமையும்.


சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி கோவிலை வலம் வருதல். காலணிகளை களைந்து வலம் வருதல்,தோப்புக்கரணம் இடுதல் கும்பிடுதல் முதலியவை உடற்பயிற்சியின் சக்தியை அதிகரிக்கின்றது.


இவ்வாறு நாம் அறியாமலேயே உடலில் உள்ள எல்லா மூட்டுக்களும் ,தசைகளும் நன்றாக அசைவதால் கோவிலை வலம் வருவது ஒரு உடற்பயிற்சியாக அமைகிறது .வலம் வருதல் என்பது பொதுவாக வலது பக்கம் சுற்றி வருவதாகும் .கோவிலை சுற்றி வருவதால் இறைவனுடன் கூடுதலாக நெருங்குகிறோம் என்பதும் நம்பிக்கையாக கருதப்படுகிறது. கோவில் வலம் வருவதால் முன் ஜென்மங்களில் செய்த பாவமும் அழிந்துவிடும் என்பது நம்பிக்கை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News