Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜனவரி 22-ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன்?- ஜோதிட வல்லுனர்கள் கூறும் காரணம்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு ஜனவரி 22ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கு ஜோதிட வல்லுனர்கள் கூறும் காரணம்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜனவரி 22-ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன்?- ஜோதிட வல்லுனர்கள் கூறும் காரணம்!

KarthigaBy : Karthiga

  |  7 Jan 2024 3:45 AM GMT

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் 5 வயது குழந்தை உருவம் கொண்ட ராமர் தனது வில்லுடன் காட்சியளிக்கும் சில 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலை மைசூர் சிற்பி அருண் யோகராஜ் என்பவரால் கிருஷ்ணா சில்லா என்ற வகை கல்லில் செதுக்கப்பட்ட தாகும். ஜனவரி 22ஆம் தேதி சுபமுகூர்த்த நாளாகும் .இந்த நாளில் சர்வார்த்த சித்தி, அம்ரித் சித்தி, மற்றும் ரவி என மூன்று யோகங்கள் ஒருசேர வருகிறது .


இந்த மூன்று யோகங்களும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதற்கு மிகவும் மங்களகரமான நாளாகும். மேலும் அன்றைய தினம் துவாதசி திதியாகவும் இந்த நாளில் தான் கடவுள் விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து பாற்கடலை கடைய உதவினார். ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால் இந்த நாள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு மிகவும் உகந்ததாகம். கோவிலில் உள்ள கருவறையில் ராமர் சிலை அபிஜித் முகூர்த்த நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த நேரம் பகல் 11:51 க்கு தொடங்கி 12 .34க்குள் முடிகிறது. இருப்பினும் அதிலும் மிகவும் நல்ல நேரமாக 12 புள்ளி 29 நிமிடங்கள் எட்டு வினாடிகள் முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் வரை என மொத்தம் 84 வினாடிகளில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.


சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் 15 முகூர்த்தங்கள் உள்ளன. இது நடுப்பகுதி அபிஜித் முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது . இந்த அபிஜித் முகூர்த்தத்தில் தான் திரிபுரசூரன் என்ற அரக்கனை சிவபெருமான் வதம் செய்தார். மேலும் இந்த முகூர்த்தத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும் நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜோதிடக் கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News