Kathir News
Begin typing your search above and press return to search.

பசு கோமாதா ஆனது எதனால்?

பாரத மக்கள் பசுவை கோமாதா என கொண்டாடி மகிழ காரணம் என்ன என்பது பற்றி தகவல்

பசு கோமாதா ஆனது எதனால்?

KarthigaBy : Karthiga

  |  29 Aug 2022 4:15 PM GMT

பசுவை கோமாதா வாக சிறப்பித்துக் கொண்டால் பசு இறைச்சியை உணவாகக் கொள்ளும் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் நற்குணங்களும் நன்மைகளும் நிறைந்த பசுவைக் கொன்று உண்ணுவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர்களிடம் எப்படி நன்மை எதிர்பார்க்க முடியும் .


ஆனாலும் கோமாதா என்ற கருத்து ஆதிகாலம் முதல் பாரத மக்களிடையே இருந்து வந்தது. தூய்மையின் சின்னமாக விளங்கும் பசுவை மாதாவாக கருதுவதற்கான காரணங்கள் பல உள்ளன. பசுவின் பால் சாணம் ,சிறுநீர் என்பவை தூய்மையானது என்று கருதுகின்றோம்.


மேலும் பசுவை காண்பது கூட நன்மை என்று முன் தலைமுறை நம்பியிருந்தது. கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு கருத்தும் பாரத மக்களிடையே உண்டு. நிலையான பாரத கலாச்சாரத்தில் கோமாவுக்கு மிக முக்கியமான இடம் அளித்து இருந்தனர் என்பதும் தாயைப்போல கருணை காட்டும் பசுவை தாயாக நினைப்பதும் பராமரிப்பதிலும் பாரத மக்கள் காட்டும் தூய்மையான ஆர்வத்தை மேல் நாட்டவர்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர்.


வேறொரு உயிரினத்தை சிறப்பாகவும் பரிசுத்தமாகவும் காண இயலும் கலாச்சாரம் மெச்ச படவேண்டியது வேண்டியது என்பது மேல் நாட்டவர் கருத்து .பசுவிலிருந்து நமக்கு முக்கியமாக கிடைக்கும் பால் ஊட்டச் சத்தாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. காலம் காலமாக பயன்படுத்தி வரும் பாலிலிருந்து கிடைக்கும் தயிர் வெண்ணெய் நெய் முதலியவை பசு நமக்காக வழங்குகின்றது.


பொதுவாக மலத்தை அசுத்தமாக கருதும் நாம் சாணத்தை அசுத்தமானதாக நினைக்கின்றோம். மேலும் தாவரங்களுக்கு இதை உரமாகவும் பயன்படுத்துகின்றோம் சில மருந்துகளில் சேர்ப்பதற்காக பசுவின் சிறுநீர் பயன்படுகின்றது.

இப்படி மனிதனுக்கு எந்த விதத்திலும் பயனளித்து வரும் ஒரு சாதுவான பிராணியை தாய் என்று நினைப்பதில் தவறில்லை அதனால்தான் பசுவை கோமாதா என்றானது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News