Kathir News
Begin typing your search above and press return to search.

திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது ஏன் ?

திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது ஏன் ?

திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது ஏன் ?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  30 Nov 2020 5:55 AM GMT

இந்திய சமூகத்தில் குங்குமத்திற்கு அதீத முக்கியத்துவம் உண்டு. திருமணமான பின் இந்திய பெண்கள் குறிப்பாக இந்து பெண்கள் குங்குமத்தை நெற்றி வகிடில் சூடிக்கொள்வது பல நூற்றாண்டாக தொன்று தொட்டு வரும் பழக்கம். இவ்வாறு வைத்து கொள்வதால் தங்கள் கணவன் மார்களின் தீர்க ஆயுளின் மேல் தாங்கள் எவ்வளவு விருப்பம் கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படையாக உணர்த்தும் ஓர் உணர்வுபூர்வமான சடங்காக இது காணப்படுகிறது.

குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது மஹாசக்தி பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் அணிந்து குங்குமத்தை அணிந்து கொள்கிற போது தேவியின் பரிபூரண அருளை பெறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இதை சூடிக்கொள்ளும் பெண்களின் கணவன் மார்களை தேவி மாசக்தி காத்தருள்கிறாற் என்பது நம்பிக்கை.

ஹரப்பா காலத்திலிருந்தே பெண்கள் குங்குமத்தை தங்கள் கூந்தலில் சூடி கொண்ட குறிப்புகள் உண்டு. 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கலாச்சார முக்கியத்துவத்தை பெற்றது குங்குமம். புராணத்தில் நெற்றியில் இடும் குங்குமத்தை தீபத்தின் ஜூவாலையின் வடிவில் கிருஷ்ணரை எண்ணி ராதா மாற்றியதாக சொல்லப்படுகிறது. லிலிதா சஹஸ்ஹரநாமம் மற்றும் சவுந்தர்ய லஹரி ஆகியவையில் குங்குமம் குறித்து மிக உயர்வாக சொல்லப்பட்டிருக்கிறது.

பல சுப காரியங்கள், மற்றும் விழாக்களின் போது கணவன்மார்கள் தங்களின் மனைவியருக்கு நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம். அடுத்து நெற்றியில் குங்குமத்தை அணிவதால் ஏற்படும் உளவியல் மற்றும் அறிவியல் ரீதியான நன்மை என்னவெனில் குங்குமம் என்பது மஞ்சள் மற்றும் எலும்பிச்சையின் தன்மையை கலக்குவதாலும் அதனுடன் உலோக பாதரசம் சேர்ப்பதாலும் உருவாவது எனவே அதற்குரிய தன்மையினால் அவை இர த்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதாகவும். மேலும் பிட்டியூட்ரி சுரபியை தூண்டுவதாகவும் உள்ளது. பிட்யூட்ரி சுரபி சிறுமூளையின் கீழ் இருப்பதால், அனைத்து விதமான உணர்வுகளை கட்டுபடுத்தும் இடமாக நெற்றியிருப்பதால் அங்கே பெண்கள் குங்குமம் வைக்கிறார்கள்.

இன்றும் கூட திருமண நிகழ்வுகளில் முக்கிய சடங்காக இருப்பது குங்கும தானம் எனப்படும், மணமகன் மணமகளுக்கு குங்குமம் வைக்கும் சடங்கு. மணநாள் அன்று மாங்கல்யம் அணிவிக்கும் சடங்குக்கு இடாக மணமகன் மணமகளுக்கு நெற்றி வகிடில் குங்குமம் வைப்பார். அல்லது ஒரு சில இல்லங்களில் அத்தை முறை உறவுகள் அனைவரும் குங்குமம் வைப்பது வழக்கம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News