Kathir News
Begin typing your search above and press return to search.

விழாக்களிலும், விசேஷ வீடுகளிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது எதற்காக?

புதுமனை புகுவிழா மற்றும் வேறு சில விசேஷங்கள் மற்றும் விழாக்களில் மாவிலை தோரணங்கள் கட்டப்படுவற்கான காரணங்கள்

விழாக்களிலும், விசேஷ வீடுகளிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது எதற்காக?

KarthigaBy : Karthiga

  |  6 Sep 2022 6:15 AM GMT

புதுமனை கட்டி முடித்து அதற்கு புகுவிழா நடத்தும் போது மாவிலை தோரணம் கட்டுவது வழக்கம் .இதன் பயன்கள் தெரியாவிட்டாலும் இவ்வாறு செய்வது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது . மாவிலைத் தோரணம் கட்டுவது லட்சுமி கடாட்சத்தின் அறிகுறியாக அறியப்பட்டாலும் இதில் வேறு சில அறிவியல் உண்மைகளும் உள்ளது.


புதுமனை புகுவிழா நடத்தும் வீட்டில் நம்மை முதலாவதாக வரவேற்பது வாசலில் மாவிலை தோரணங்கள் தான் ஆனாலும் இதை யாரும் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. மாவிலைத் தோரணதிற்கு பின்னால் உள்ள உண்மைகளை பண்டைக் காலத்திலேயே அறிந்திருந்ததினால் வழக்கம் இன்றும் உள்ளது. புதுமனை புகுவிழா மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய சுபகாரியங்களுக்கும் சிலர் மாவிலைத் தோரணம் கட்டுவது உண்டு.


விசேஷ வீடுகள் என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படி அதிக பேர் வந்து சேரும் இடத்தில் வாயு அசுத்தமாவது இயற்கை .அந்த அசுத்த வாயுவை சுத்தம் செய்யும் சக்தி மாவிலைக்கு உண்டு .மாவிலையை வாசலிலும் வீட்டிற்குள்ளும் கட்டுவது இதற்காகத்தான் .இதற்கு பதிலாக மாவிலை வடிவில் பிளாஸ்டிக் இலையால் ஆன தோரணம் கட்டுவதும் உண்டு.இதனால் பயன் இல்லை என்பது மட்டுமல்ல பிளாஸ்டிக் இலைகளால் தீமையும் உண்டு. மாவிலைக்கு நோயணுக்களின் சக்தியை அழிக்க இயலும் என்று அறிந்திருந்த முன்னோர்கள் மாவிலையால் பல் துலக்குவதும் உண்டு. கிணற்றை சுத்தம் செய்ய இறங்கும்போது கிணற்றில் உள்ள அசுத்த வாயுவில் சிக்கி மூர்ச்சையாகும் நிகழ்வுகள் நாம் அறிந்துள்ளோம் .


ஆழமான கிணற்றில் இறங்குவதற்கு முன் மாமரத்தின் ஒரு கிளையை ஒடித்து கட்டி இறங்கி சுழற்றியபின் வெளியே எடுத்தால் சுத்தவாயு கிடைக்கும் என்று நம் பண்டைய மக்கள் சொல்ல கேட்பதுண்டு .ஆகவே காற்றை சுத்தம் செய்யக்கூடிய சக்தி மாவிலைக்கு உண்டு என்பதனால் மாவிலை தோரணம் கட்டப்படுகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News