Kathir News
Begin typing your search above and press return to search.

வழிபாட்டிற்கு மலர்களை அர்பணிப்பதன் முக்கியத்துவம் என்ன? சுவாரஸ்ய தகவல் !

வழிபாட்டிற்கு மலர்களை அர்பணிப்பதன் முக்கியத்துவம் என்ன? சுவாரஸ்ய தகவல் !
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  2 Nov 2021 12:30 AM GMT

மலர்களை இறைவனுக்கு அர்பணித்தல் என்பது இன்று நேற்று தொடங்கிய விஷயம் அல்ல. நம்முடைய மரபில் இறைவனுக்கு மலர்களை அர்பணிப்பதை புஷ்பாஞ்சலி என்று அழைக்கிறோம். மலர்கள் என்பது நம்முடைய இறை வழிபாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. மேலும் இந்த ஒவ்வொரு இறைவனுக்கு ஒவ்வொரு விதமான மலர் உகந்ததாக சொல்லப்படுகிறது.

இறைவனின் அருளை பரிபூரணமாக ஒருவர் பெற மலர்களை அர்பணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். பொன் வைக்கும் இடத்தில் பூவை வையுங்கள் என்பார்கள். பொன் எனும் மதிப்பு உலோகத்தை காட்டிலும் பூவின் மதிப்பு மிக உயர்ர்ந்தது என்பதை உணர்த்தவே இவ்வாறு சொல்லப்பட்டது. மலர்களை வைக்கும் போது அவை பரப்பும் நறுமணமும் சுகந்தமும் அந்த இடத்தின் தன்மையை மாற்றுகின்றன.

வெவ்வேறு விதமான எண்ணங்களில் தடுமாறுகிற மனதை ஒரு நிலைப்படுத்த மலர்கள் உதவுகின்றன. பூஜை எனும் சொல், பூஜா என வடக்கில் சொல்லப்படுகிறது. இதில் பு எனும் ஒலி புஷ்பம் என்பதையும் ஜா என்பது ஜபம் என்பதையும் குறிக்கிறது. எந்த கடவுளுக்கு எந்தவித மலர்கள் உகந்தது என்பதை காணலாம்.

இறைவனுக்கு மலரை அர்பணிக்கிற போது, அது முள்ளில்லா மலர்களாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மலரை அர்பணிப்பதால் மாத்திரம் ஒருவர் இறைவனின் அருளுக்கு பாத்திரமாக முடியாது. மலர் என்பது நம் மனதின், நம் உண்மையான பக்தியின் வெளிப்பாடு. எனவே மலரை அளிப்பதென்பது நமது எதிர்பார்ப்பில்லா பக்தியை வழங்குவதன் அடையாளமே ஆகும்.

உயிர்கள் அனைத்திடமும் இருக்கும் மூவகையான குணங்கள் சாத்வீகம், ரஜோ மற்றும் தாமச குணம். இந்த குண நலன்கள் மலர்களுக்கும் பொருந்தும். அவற்றின் மணம், வடிவம், வண்ணம், மூலம் ஆகியவற்றை கொண்டு அதன் குணங்களை பகுக்கின்றனர். தாமச குணம் கொண்ட மலர்கள் குறிப்பிட்ட நிகழ்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை தாமரை, மல்லிகை, இந்த வகையை சேர்ந்த தாகும்.

சிவப்பு தாமரை மலர் ரஜோ குணத்தின் உதாரணமாகும். செம்பருத்தி மலர் விநாயகருக்கு மிகவும் உகந்த-தாம், சிவனுக்கு வில்வம்,, விஷ்ணுவிற்கு துளசி அம்பாளுக்கு சிவப்பு நிற பூக்களான அறளி போன்றவைகள் உகந்ததாக கருதப்படுகின்றன.

மொத்தத்தில் மலர்களை அர்பணித்தல் என்பது ஒருவித பக்தி பாவம், என் வேண்டுதலுக்கு செவி மடுப்பாய் கடவுளே என நம் உணர்வை வெளிப்படுத்தும் ஓர் உன்னத வழி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News