Kathir News
Begin typing your search above and press return to search.

சங்கராந்தியில் காப்பு கட்டுவது ஏன்? தமிழர்களின் ஆச்சரியமூட்டும் அறிவியல்

சங்கராந்தியில் காப்பு கட்டுவது ஏன்? தமிழர்களின் ஆச்சரியமூட்டும் அறிவியல்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  14 Jan 2023 12:30 AM GMT

இன்று போகி, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதும் பழமொழி. இங்கே பழயன என்பது வெறும் பொருள் மாத்திரம் அல்ல பழைய துன்பம், துக்கம், துயரம் என அனைத்து கழிந்து மகிழ்ச்சி புகும் நன்நாள் இது.

மார்கழியின் இறுதியில் மகிழ்ச்சி புலர்வதன் அடையாளமாக மார்கழியின் இறுதி நாள் போகியாக கொண்டாடப்படுகிறது. போகி முடிந்து தை பிறக்கையில் வாழ்விற்கான புதிய வழி பிறந்ததாக தமிழர்கள் கோலாகலமாய் கொண்டாடுகின்றனர். அறுவடை செய்து விளைச்சல் காணும் மாதம் இது. நம் முன்னோர்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்தே செய்தனர் என்பதற்கு உதாரணம் இந்த போகி. போகியை தொடர்ந்து வரும் தை பொங்கல் தமிழர்களின் திருநாள் என்றாலும். போகி எனும் இந்நாள் நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயரில் கொண்டாடப்படுவது தனிச்சிறப்பு.

குஜராத்தில் உத்ராயண் என்றும், பஞ்சாபில் லொகரி, வங்கத்தில் பவுஸ் சங்க்ராத்தி, ஒடிசாவில் மகர செளலா, அசாமில் பொகலி பிகு காஷ்மீரத்தில் ஷிசூர் என பல மாநிலங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் பூகோளத்தின் அடிப்டையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் அதாவது சூரியன் மகர ரேகைக்கு மாறும் முதல் நாள் இது. இதன் மூலம் குளிர்காலம் முடிவுக்கு வந்து வெப்ப காலம் தொடங்க போவதை உணர்த்தும் நாள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாளில் தமிழகத்தில் ஒரு தனித்துவமான பழக்கம் ஒன்று உண்டு. நல்ல நேரம் பார்த்து வீடுகள் தோரும் காப்பு கட்டுவார்கள். அது என்ன காப்பு கட்டுதல் என்றால்.. சிறுபீளை, பூலைப்பூ, வேப்பிலை, தும்பை, மாவிலை, பிரண்டை ஆகியவற்றையெல்லாம் சிறு சிறு கொத்துகளாக கட்டி வீட்டின் முகப்பில், வீட்டினுள் சமையல் கூடம் மற்றும் மற்ற அறைகளில் இந்த காப்பு கட்டை செருகுவது வழக்கம்.

இப்படியொரு பழக்கம் ஏன் வந்தது. முன்பு சொன்னது போல நம் முன்னோர்கள் அறிவார்ந்த ஞானிகள். இந்த காப்பு கட்டில் உள்ள அனைத்தும் மூலிகைகளே. ஆவரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது சித்தர் பாடல். எனில் இன்று ஆவாரம் டீ, ஆவாரம் பொடியில் கஷாயம் என எத்தனை நன்மைகள் நாம் உணர்ந்திருக்கிறோம். குளிர் காலத்திலிருந்து வெப்ப காலத்திற்கு மாறும் இந்த மகர சங்கராந்தி நாளில் இவ்வாறு மூலிகைகளை நாம் காப்பாக அதாவது பாதுகாப்பாக கட்டுவதன் மூலம் திடீரென தோன்றும் நோய்கள் வயிற்று போக்கு, ஒவ்வாமை, விஷம் போன்ற எதிர்பாராத விளைவுகளிலிருந்து விடுதலை பெறவே இப்படியொரு பழக்கம் உருவாக்கப்பட்டது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News