Kathir News
Begin typing your search above and press return to search.

ஶ்ரீராமஜெயம் எழுதி இறைவனுக்கு சாற்றுவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மை என்ன?

ஶ்ரீராமஜெயம் எழுதி இறைவனுக்கு சாற்றுவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மை என்ன?

G PradeepBy : G Pradeep

  |  17 April 2021 1:00 AM GMT

பொதுவாக மந்திர ஜெபம் என்பது வாயால் உச்சரிப்பதாக இருக்கும். லிகித ஜெபம் என்பது மந்திரங்களை உச்சரித்தபடியே எழுதுவது. உண்மையில் வாயால் உச்சரிக்கும் ஜெபத்தை விட லிகித ஜெபத்திற்கு சக்தி அதிகம். இந்தியாவில் பொதுவாக ராம நாம ஜெபத்தை இதுபோன்று எழுதி ஜெபிக்கும் வழக்கம் உண்டு. அதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ராம நாமத்தை எழுதும் போது நாம் அந்த நாமத்தில் முழுமையாக சரணடையும் மனநிலைக்கு வந்துவிடுவோம்.



மனதில் ஆழமான அமைதி வந்து விடும். இந்த ராம நாமத்தை எழுதும் பொது சிவப்பு மையினால் எழுதுவது சிறந்ததாகும், எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். இந்த நாமத்தை எழுதும் பொது மனம் தெளிவடைந்து பொறுமை மன வலிமை தடைகளை எதிர்க்கும் சக்தி ஆகியவை வந்து சேர்ந்து விடும். ஒரு நாளில் எவ்வளவு தடவை எழுத முடியுமோ அவ்வளவு தடவை எதை எழுதினால் போதும், தடைகள் எல்லாம் சிறுது சிறிதாக விலகுவதை நாம் பார்க்கலாம். ஒரு முழு புத்தகத்தை முடிக்கும் வரை இதை எழுதுவது நல்லது. புத்தகம் தீர்ந்த வுடன் அதை எதாவது ஒரு ராமர் கோவிலுக்கு அளித்துவிடலாம்.

இந்த ஜெபத்தை எழுதும்போது நாம் எதையும் எதிர்பார்க்காமல் எழுதுவது அதிகமான நன்மையை தரும். நாட்கள் அதிகம் ஆக ஆக நம் விழிப்புணர்வு உயரிய நிலைக்கு செல்வதை நாம் நன்றாக உணர முடியும். ராம் என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும், அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்புடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன.

ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும். "தாரக மந்திரம்" என்கிற ஒரு சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லச்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும்

ச்ர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News