ஜாதக பிரச்சனைக்கு பசுவுக்கு உணவு வழங்கும் பரிகாரம் பரிந்துரைக்கப்படுவது ஏன் ?
ஜாதக பிரச்சனைக்கு பசுவுக்கு உணவு வழங்கும் பரிகாரம் பரிந்துரைக்கப்படுவது ஏன் ?
By : Thoorigai Kanaga
இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, க்ரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் நகரிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது.
இந்து மரபின் படி, கோமாதா கொண்டிருக்கும் விஷேச சக்திகள் பின்வருமாறு.
33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.
எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும். மேலும் பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும் . ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
மேலும், நீங்கள் எங்காவது ஒரு நல்ல காரியமாக செல்கிற போது பசுவினுடைய சப்தத்தை கேட்டால் அது அக்காரியம் வெற்றி என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.
மேலும் ஏதேனும் கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பின் புனித பசுவின் வால் பகுதியில் அமைந்துள்ள ஜடையை கொண்டு ஏழு முறை மந்திரிப்பதை போன்ற செயலை செய்கிற போது திருஷ்டிகளை களைய முடியும்.
பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும். பசுவினுடைய நெய்யினால் தீபம் ஏற்றப்பட்டால் அது பல நல்ல அதிருவ்களை ஈர்ப்பதாக அமையும்.
வீட்டின் பூஜையறையில் கிருஷ்ணர் பசுவினுடன் இருப்பதை திருவுருவ படத்தை வைத்து வழிபட்டால் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை.
நலம், வளம், செல்வம் என அனைத்து செளபாக்கியங்களையும் பசுவினை வழிபடுவது நம் நல்வாழ்விற்கு பெரும் உதவியாக அமையும். மகிழ்வான வாழ்விற்கு கோமாதாவின் ஆசிகளை பெறுவது அவசியமாகும்.