Kathir News
Begin typing your search above and press return to search.

இறையை வணங்க ஏற்றும் தீபத்தில் எண்ணையை விடவும் நெய் உயர்ந்தது ஏன்? நெய் தரும் அதிசய பலன்கள்

இறையை வணங்க ஏற்றும் தீபத்தில் எண்ணையை விடவும் நெய் உயர்ந்தது ஏன்? நெய் தரும் அதிசய பலன்கள்

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  13 Jan 2021 5:45 AM GMT

இந்து வழிபாட்டு முறைகளில் மிக முக்கியமானது மற்றும் முதன்மையானது விளக்கு ஏற்றுவது. பூஜையின் முக்கிய அங்கம் என்றும் சொல்லலாம். சமயத்தில் தீபத்தையே நாம் தெய்வமாக கருதி வழிபடும் அளவு புனிதமானது நாம் பூஜை அறையில் தெய்வீகம் கருதி ஏற்றப்படும் விளக்குகள். தீபமேற்றுவதால் அங்கே தெய்வீகத்தின் அம்சம் நிறைகிறது. தெய்வத்தின் இருப்பை நாம் உணர முடிகிறது. இந்த ஒளியும் அது தருகின்ற கதகதப்பும் நமக்குள் இருக்கிற ஆன்மீக உணர்வை அதிகரிக்க செய்கிறது.

மேலும், தீபம் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு அம்சமாகவும் திகழ்கிறது. இந்து மதம் என்பதை தாண்டி மற்ற மதங்களில் கூட நெருப்பு எனும் அம்சத்தில் தெய்வத்தை காண்பதும், தெய்வத்தை வழிபடுவதற்கான கருவியாக பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. தீபம் தருகிற ஜூவாலையின் மூலம் அந்த தெய்வமே சுடர் வடிவில் எழுது அருளுவதாக நாம் கருதுகிறோம்.

மேலும், நம் வழிபாட்டு வழிமுறைகள் அனைத்துமே நம்முடைய ஏழு சக்கரத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் தீபமேற்றுவது நம்முடைய இரண்டு சக்கரங்களை அதாவது மூலாதாரம் சுவாதிஸ்டானம் ஆகிய இரு சக்கரங்களையும் தூண்டும். அதிலும் குறிப்பாக நெய் தீபம் ஏற்றுகிற போது அவை மணிப்பூரகம் மற்றும் அனாகதத்தை தூண்டும்.

இப்பொது தான் விளக்கினை ஏற்ற பயன்படுத்தும் எரிபொருல் குறித்த நமக்கு கிடைக்கிறது. பொதுவாக நாம் விளக்குகளை எண்ணெய் அல்லது நெய் கொண்டு ஏற்றுவோம். இந்த இரு பொருளுக்கும் உள்ள வேறுபாடு யாதெனில், எண்ணெய் கொண்டு ஏற்றும் பொருள் சூரியநாடியை தூண்டும் தன்மை கொண்டது. நெய் தீபம் என்பது ஏற்றும் மனிதரின் தேவைக்கேற்ற நாடியை தூண்டும் அதிசய வல்லமை கொண்டது.

மேலும் பண்புகளை ஆன்மீகத்தில் ரஜோ குணம், சாத்வீக குணம், தாமச குணம் என பிரிக்கின்றனர். எண்ணெய் தீபம் ஏற்றுகிற போது அது பரப்பக்கூடிய கதகதப்பின் மூலமும், ஆற்றலின் மூலம் ஒருவரின் ரஜோ குணம் எனப்படும் அதீத ஆற்றல் தூண்டப்படுகிறது. அதுவே நெய் தீபம் ஏற்றுகையில் சாத்வீக குணம் தூண்டப்பட்டு நேர்மறை எண்ணங்களும், சிந்தனைகளும் மிக அதிகமாக மேம்படுகிறது.

மேலும் ஒரு நுட்பமான வித்தியாசம் இந்த இரண்டிற்க்ம் உண்டு, எண்ணெய் தீபம் ஏற்றுகையில் சுடரை சுற்றி மஞ்சள் நிறத்திலான ஒளிவட்டம் அதாவது தீபச்சுடரின் ஆரா அமைந்திருக்கும். இத பளபளப்பான நிறம் தெய்வீகத்தின் அடையாளமாக கருதுகிறோம். அதே வேளையில், நெய் தீபம் ஏற்றும் போது சுடரை சுற்றி மஞ்சள் நிறத்தோடு சேர்ந்து நீல நிறத்திலான ஆரா அமைந்திருக்கும். இந்த நில நிற ஒளிவட்டத்திற்கு குபேரரின் ஆசியை ஈர்க்கும் தன்மையிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News