Kathir News
Begin typing your search above and press return to search.

முழுமையான ரூபமாக பூரி ஜெகநாதர் ஏன் இல்லை? ஆச்சர்ய தகவல்!

முழுமையான ரூபமாக பூரி ஜெகநாதர் ஏன் இல்லை? ஆச்சர்ய தகவல்!

முழுமையான ரூபமாக பூரி ஜெகநாதர் ஏன் இல்லை? ஆச்சர்ய தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2020 5:30 AM GMT

பாண்டவர்கள் தங்களுடைய பூலோக வாழ்வை முடித்துக் கொண்டு தங்களுடைய முக்தியை நோக்கி திரும்புகையில் சப்தரிஷிகளின் அறிவுரைப்படி பல முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபட்டனர். அவர்களுடைய மோட்சத்தை தேடி பல கோவில்களுக்கு சென்றனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்றாக ஒடிசா மாநிலத்தில் ஊரில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவில் அமைதுள்ளது.

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் இருக்கும் மூலவரை மக்கள் முழுமையாக தரிசிக்க முடிந்தது இல்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலில் நடைபெறும் ரத யாத்திரையில் பிரமாண்டமான ஜெகன்நாதர் திருஉருவமும் அவரோடு அவருடைய சகோதரரான பலராமரின் திருவுருவமும் சகோதரியான சுபத்திரையின் திருவுருவமும் மிகவும் பிரமாண்டமான தேர்களில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படும். இதை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.

புராணங்களின் படி இந்த கோயிலை இந்திரத்யூமன் கட்டியதாகவும் ஒருமுறை அவர் நதிக்கரையில் நீராடிய பொழுது இரும்பு கம்பு போன்ற ஒரு பொருள் அவர் கைக்கு கிடைத்துள்ளது. அப்போது அவருடைய காதுகளில் அசரீரியாக “இது என்னுடைய இதயம் இது இந்த பூமியில் எப்போதும் நிலைத்திருக்கும்” என விஷ்ணு பரமாத்மா சொன்னதாகச் சொல்லப்படுகிறது.

இதைக் கேட்ட இந்திரத்யூமன் உடனடியாக பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்கு ஓடிச்சென்று யாரும் பார்க்காதவாறு மூலவர் சிலையினுள் நிறுவியதாகவும். அதன்பின் அந்த கம்பை யாரும் பார்க்கவும் தொடவும் அவர் அனுமதிக்கவில்லை எனவும் ஒரு குறிப்பு உன்டு.

இதைத்தாண்டி இந்த கோவிலில் நிகழும் ஆச்சரியங்கள் ஏராளம் இந்த கோவிலில் கொடி எப்போதும் காற்றடிக்கும் திசைக்கு எதிர்ப்புறமாக தான் பறக்கும். இந்த கோவிலில் இருக்கும் சுதர்சனச் சக்கரத்தை நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் அது உங்களை நோக்கி இருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கும்.

பொதுவாக பகல் பொழுதில் கடலிலிருந்து நிலத்திற்கு காற்று வீசும் மாலை நேரத்தில் இதற்கு எதிர்ப்புறமாக நிலத்திலிருந்து கடல் காற்று வீசும் ஆனால் பூரி கோவில் இது நேர்மாறாக நிகழ்கிறது. அடுத்து இந்த கோவிலின் கோபுரத்தில் எந்த பறவையும் விமானங்களும் பறப்பதில்லை. இந்த கோவில் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும் யாராலும் காண முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

இந்த கோவிலில் சமைக்கப்படும் உணவை ஒரு போதும் வீணாவதில்லை அது சில ஆயிரம் பேராக இருந்தாலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களாக இருந்தாலும் அனைவருக்கும் கிடைக்கிறது உணவு வீணாவது இல்லை. இதுபோல் ஏராளமான ஆச்சிரியங்கள் அதிசயங்கள் அற்புதங்கள் அனைத்தையும் நிகழ்த்துவது அந்த பரந்தாமனின் லீலையன்றி வேறென்ன

Next Story
கதிர் தொகுப்பு
Trending News