Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீக மரபில் ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?

ஆன்மீக மரபில் ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?

ஆன்மீக மரபில் ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2020 5:30 AM GMT

ஸ்வஸ்திக் சின்னம் உலக வரலாற்றில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் இந்த சின்னத்தின் பூர்வீகம் இந்திய நாடுதான். ஹிந்து மதத்தின் பல முக்கியமானதாக இருக்கக்கூடிய "ஓம்" என்பதற்கு அடுத்தபடியாக உள்ள சின்னம் இந்த ஸ்வஸ்திக் சின்னமாகும், இந்த சின்னம் ஹிந்து மதத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஸ்வஸ்திக் என்கிற சமஸ்க்ரித பெயருக்கு "நன்னலம்" அல்லது “அதிர்ஷ்டம்” என்று அர்த்தம். இந்த சின்னம் சீனாவிலும் ஜப்பானிலும் ஏன் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக ஆன்மீக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சின்னம் இரண்டு தன்மையுள்ளதாக இருக்கிறது, வலதுபுறம் சுற்றும்படி அமைக்கப்பட்டிருக்கும் சின்னம் சூரியனையம் விஷ்ணுவையும் குறிக்கும்.

இடது புறம் சுற்றும் படி இருக்கும் ஸ்வஸ்திக் சின்னமானது இருளின் சக்தியையும் காளி என்கிற பெண் தெய்வத்தையும் குறிக்கும். 1979 இல் சமஸ்க்ரித அறிஞர் பி ர் சர்க்கார் இந்த சின்னத்தின் உண்மையான அர்த்தம் “நிரந்தர வெற்றி” என்று கூறியிருக்கிறார் ஆனாலும் இந்த சின்னம் வரையப்படும் திசை மற்றும் வடிவத்தை கொண்டு நல்ல மற்றும் தீய பலன்களை தரும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த ஸ்வஸ்திக் சின்னம் 12000 வருடத்திற்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும் கிரீஸ் மற்றும் துருக்கி, பின் உக்ரைனில் உள்ள இடங்களிலும் இந்த சின்னம் பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்திய வரலாற்று அறிஞர்கள் இந்த சின்னம் கிருஷ்ணரின் சின்னம் என்றும் கூறுகின்றனர், கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகை நகரத்தில் இந்த சின்னம் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சின்னம் ரோமானிய எத்தியோப்பிய கிறிஸ்தவ தேவாலயங்களில் செதுக்கப்பட்டிருக்கிறது அதன் அர்த்தமாக “செழிப்பான வாழ்வு” என்று அதன் அருகில் எழுதப்பட்டிருக்கிறது . இந்த சின்னத்தில் இருக்கும் நான்கு கோடுகள் நான்கு திசைகளை குறிப்பதாகவும், நான்கு வேதங்களை குறிப்பதாகவும் இருக்கிறது பௌத்த மதத்திலும் இந்த சின்னம் பயன்பாட்டில் இருந்திருக்கிறது ஜைன மதத்தின் 24 புனிதமான சின்னங்களில் ஸ்வஸ்திக் சின்னமும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சின்னம் தாந்த்ரீக வழிமுறைகளும் பயன்பட்டு வந்திருக்கிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News