Kathir News
Begin typing your search above and press return to search.

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருப்பது ஏன்?

அனைத்து சிவாலயங்களின் வாயில்களிலும் நந்தி சிலை அமைய பெற்றிருக்கும் இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல்

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருப்பது ஏன்?
X

KarthigaBy : Karthiga

  |  30 Sept 2022 7:30 PM IST

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும்.எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்" என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.


பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். நந்தி வழிபாடு நற்கதியளிக்கும் என்பார்கள்.சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. நந்தி (காளை) என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார். எனவேதான் அனைத்து சிவாலயங்களின் வாயில்களிலும் நந்தி சிலை அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News