Kathir News
Begin typing your search above and press return to search.

மாங்கல்ய தோஷத்திற்கு வாழை மரத்தை மணப்பது ஏன்?

மாங்கல்ய தோஷத்திற்கு வாழை மரத்தை மணப்பது ஏன்?

மாங்கல்ய தோஷத்திற்கு வாழை மரத்தை மணப்பது ஏன்?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  25 Nov 2020 6:00 AM GMT

வாழை மரம் என்பது மர குடும்பமே இல்லை என்றாலும், அதனுடைய வடிவம் அளவினை பொறுத்து அதனை மரம் என ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனபோதும் வாழை மரம் என்பது புனிதமான மரமாக கருதப்படுகிறது. காரணம், அதனுடைய அனைத்து பகுதிகளும் மனிதர்களின் நல்வாழ்விற்காக பயன்படுகிறது. உதாரணமாக வாழைமரத்தின் கம்பம், வரவேற்பு தோரணமாக கட்டப்படுகிறது. பின் அதனுடைய இலைகள், உணவு உண்பதற்கு பயன்படுகிறது. அதன் பழம், பூ, காய் என அனைத்தும் உணவுக்காக பயன்படுகிறது.

புராணங்களின் படி ஒரு வாழை மரம் என்பது தேவகுரு பிரஹஸ்பதிக்கு இணையானதாக சொல்லபடுகிறது அல்லது குரு பகவானுக்கு இணையானது. ஜோதிட சாஸ்திரத்தின் படி கற்களை மோதிரமாக அணியும் பழக்கம் உண்டு அதன் படி குருபகவானுக்கு உகந்த கல்லை அணியும் வசதியில்லாதவர்கள் வாழை மரத்தின் வேரினை மோதிரமாக அணிந்தாலே அதற்குரிய பலனை பெறலாம்.

அனைத்து விதமான வேத சடங்குகளிலும் முதன்மையான இடத்தை பெறுவது வாழை இழை. வாழை மரம் நல்க கூடிய பழம் என்பது மிகுந்த சத்தும் ஊட்டசத்தும் நிறைந்ததாக கருதப்படுகிறது. மிக எளிமையான மக்களுக்கு மிகவும் எளிதாக கிடைக்க கூடியதாக இருப்பதே இந்த மரத்தின், இந்த பழத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

யாரொருவரால் எந்தவொரு கலைக்கோ வித்தைக்கோ குரு தக்‌ஷனை கொடுக்க முடியவில்லையோ அவர்கள் பணத்திற்கும், பொருளிற்கும் பதிலாக வாழை பழத்தை கொடுத்தாலே அவை தக்‌ஷணைக்கு ஈடானதாக மதிக்கப்படுகிறது.

மேலும் வாழை மரம் என்பது விஷ்ணு பகவானின் அம்சமாக கருதப்படுகிறது. மற்றும் குரு பகவானை வணங்க வேண்டுமென நினைப்பவர்கள் வியாழக்கிழமையில் வணங்குவது வழக்கம். மற்றொரு தனித்துவம் என்பது ஒரு மனிதருக்கு நிகரான முக்கியத்துவத்தை வாழை மரம் பெறும் இடம் எதுவெனில், யாரொருவருக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறதோ அவர்கள் வாழை மரத்தை திருமணம் செய்து அந்த தோஷ்த்தை கழிப்பது வழக்கம். அதன் பின் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அவர்களுக்கு இருக்கும் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் வேளையில், இந்த மரத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு . தோல் நோய்கள் துவங்கி, தலை வலி வரி அனைத்திற்கும் இது உபாயமாக இருப்பதாக சீன மருத்துவம் இந்த மரத்தை போற்றி கொண்டாடுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News