வடக்கில் தலை வைத்து ஏன் படுக்க கூடாது? சாஸ்திரம் சொல்வது என்ன?
வடக்கில் தலை வைத்து ஏன் படுக்க கூடாது? சாஸ்திரம் சொல்வது என்ன?

நமது முன்னோர்கள் வடக்கு மாற்றும் மேற்கில் தலை வைத்து உறங்க வேண்டாம் என நம்மை எச்சரித்து இருப்பார்கள். இந்து மரபின் படி ஒரு மனிதர் நிறைவான உறக்கத்தை பெற வேண்டும் எனில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் உறங்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
நாம் கிழக்கில் தலை வைத்து படுக்கிற போது, கிழக்கில் உதிக்கும் சூரிய ஆற்றல் அல்லது நல்ல அதிர்வுகள் பலவும் நம் சிரசின் வழியே உடலினுள் இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே உறங்கி எழுகிற பொது உச்சந் தலை குளிர்ச்சியாகவும், கால் பாதம் வெதுவெதுப்பாகவும் அதிகாலையில் இருப்பதை நாம் உணர முடியும்.
அதுவே மாறாக நாம் மேற்கில் தலை வைத்து உறங்கினால் அதன் தலைகீழ் விளைவை நாம் சந்திக்க கூடும். அதாவது, நம் உச்சந்தலை வெதுவெதுப்பாகவும், கால் பாதம் குளிர்ச்சியாகவும் இருப்பதை நாம் அதிகாலையில் உணர முடியும். இதனால் அதிகாலையில் நாம் எரிச்சலான மனநிலையை, சில சமயங்களில் தலை வலி, மற்றும் தலை பாரமாக இருப்பதாய் நாம் உணர முடியும்.
ஆனால் ஒருவர் தெற்கில் தலை வைத்து உறங்கினால் எந்த வித இடையூறும் இன்றி நிம்மதியாக உறங்க முடியும். ஆனால் ஒருபோதும் உறங்க கூடாத திசை என சொல்லப்படுவது வடக்கு தான். காரணம் நாம் ஒருவர் வடக்கில் தலை வைத்து உறங்குகின்ற போது , நம் உடலில் உள்ள துருவங்கள் ஒன்றோடு ஒன்று இசைந்து போவதில்லை. அதை போலவே இந்த பூமியின் துருவங்களை ஒன்றோடு ஒன்று இசைந்து போவதில்லை. இந்த இசைவின்மை மனித உடலில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் கூடுதலாக உறங்கினாலும் நிறைவாக உறங்கிய மனநிலையை பெற மாட்டீர்கள். மாறாக வடக்கில் உறங்கி எழுகிற போது, தலை வலி, எரிச்சல், தலை பாரம் போன்ற உபாதைகளை உணர முடியும்.
மேலும், வடக்கில் தலை வைத்து படுப்பதால் இரத்தத்தில் உள்ள இரும்பு சத்து தலை பகுதியை நோக்கி செல்கின்றது எனவும் நம்பப்படுகிறது. மூலையில் சேர்ந்த அதீத இரும்பு செயல்பாட்டால் தொடர்ச்சியான தலைவலி, மூளை சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடும் என சொல்லப்படுகிறது.
அனைத்திற்கும் மேலாக, ஒருவர் நிம்மதியான உறக்கத்தை பெற தர்மம் வழியில் நடக்க வேண்டும் என்பது அடிப்படை. நம் ஐம்புலன்களும் நம் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம்.நல்ல உறக்கத்திற்கு தினசரி உறங்க செல்லும் முன் பகவத் கீதையில் இருந்து சில வரிகள் படித்தால் நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.