Kathir News
Begin typing your search above and press return to search.

சனி பகவானின் திருவுருவத்தை வீட்டில் வைத்து வணங்கக் கூடாது என்பது ஏன்?

சனி பகவானின் திருவுருவத்தை வீட்டில் வைத்து வணங்கக் கூடாது என்பது ஏன்?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  22 Jan 2022 12:30 AM GMT

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உகந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. சனி பகவானுக்கு நம் மரபில் ஈஸ்வர பட்டம் சூட்டி தெய்வமாக வணங்குகிறோம். அதே வேளையில் அவர் நவகிரகங்களில் மிக முக்கியமானவர் ஆவார். எப்பேற்பட்டவராக இருந்தாலும் ஏன் கடவுளாகவே இருந்தால் கூட சனியின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்பது ஐதீகம். எனவே ஒருவர் செய்யும் நல்ல வினை மற்றும் தீய வினைகளே சனி பகவான் நம் வாழ்வில் எந்த வகையில் பங்களிக்கிறார் என்பதை முடிவு செய்கிறது.

எப்போது சனி பகவானின் தாக்கம் நம் வாழ்வில் அதிகமாக இருக்கிறதோ அப்போது குறிப்பிட்ட பூஜைகளின் மூலம் நாம் சனிபகவானின் தாக்கத்திலிருந்து சிறிது விடுபட முடியும். எனவே தான் சனி பகவான் பூஜை,விரதம் ஆகியவை பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அவருக்குரிய நெய்வேதியம், கருப்பு நிறத்திலான அர்பணிப்பு ஆகியவற்றை வழங்கி பூஜைகள் செய்வது வழக்கம்.

ஆனால் இதில் இருக்கும் ஒரு முக்கியமான சூட்சுமம் என்னவெனில் யாரும் சனிபகவானின் திருவுருத்தை அல்லது திருவுருவப் படத்தை வீடுகளில் வைத்து வழிபடுவதில்லை. வீடுகளில் தெய்வ வழிபாடு நடைபெறுவது மிகச்சிறப்பு எனினும். சனி பகவானின் படத்தை வீடுகளில் வைக்க கூடாது என்ற விதியும் உண்டு காரணம். சனிபகவானின் கண்களை நேரே காண்பவர்களுக்கு துன்பம் நேரும் என்கிற சாபம் சனிபகவானுக்கு உண்டு. எனவே தான் அவரை நேருக்கு நேருக்கு யாரும் காண்பதில்லை. அதனாலேயே அவரின் திருவுருவத்தை வீட்டில் வைக்க வேண்டாம் என சொல்லப்பட்டது.

சனிபகவானை கோவில்களில் சென்று வணங்கும் போதும் சில விதிகள் கடைப்பிடிப்பது நல்லது என நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

முதலாவதாக, சனிபகவானை சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்போ வணங்குவது நலம். தனது தந்தையான சூரிய பகவனானுடன் சனி பகவானுக்கு பிணக்கு இருப்பதால் சூரியன் இருக்கும் போது சனி பகவானை வணங்குவதை தவிர்ப்பது நல்லது.

கோவில்களில் சனி பகவானை தரிசிக்கும் போது ஓரமாக நின்றோ அல்லது அவரின் திருபாதத்தை பார்த்தோ அவரை வணங்க வேண்டும்.

ஒருபோதும், சனிபகவானிடம் தவறான சத்தியங்களை செய்ய வேண்டாம் மற்றும் மனித குலத்திற்கு தீமை விளைவிக்கும் எதையும் வேண்டக் கூடாது. இவ்வாறான தவறான கர்ம வினைகளை எவரும் மன்னிக்க மாட்டார்கள். குறிப்பாக சனி பகவான் மன்னிக்காதது மட்டுமின்றி தண்டித்தே விடுவார் என்பது நம்பிக்கை.

ஆனால் வீடுகளில் அவருடைய திருவுருவத்தை மனதில் இருத்தி, அவருக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்யலாம்.

Image : jagran.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News