மணமகள் வலது கால் வைத்து ஏன் நுழைய வேண்டும் ?
நம் முன்னோர்கள் வலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்திருந்தனர். வலது பக்க செயல்பாடுகள் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

நம் முன்னோர்கள் வலதுக்கு மிகவும் அதிக முக்கியத்துவம் அளித்து இருந்தனர் .வலதுபக்கம் திரும்பி எழ வேண்டும், வலது கால் வைத்து நுழையவேண்டும், வலது கையால் உணவருந்த வேண்டும் இவ்வாறு வலதுக்கு மிக முக்கியத்துவம் இருந்து வருகின்றது.
இடது கையால் தண்ணீர் குடிக்கும் குழந்தைகளையும் பாட்டிமார்கள் கண்டிப்பதுண்டு. வலது பக்கத்தால் செய்யப்படும் செயல்கள் வெற்றிபெறும் என்ற எண்ணமும் மனதில் கொண்டிருக்கின்றோம். ஒரு வீட்டிற்குள் நுழையும் போது வலது கால் வைத்து செல்ல வேண்டும் என்பது விதிமுறை. அதனால்தான் புதுமணமகள் முதன் முதலில் வரும் போது வலது கால் வைத்து வீட்டினுள் நுழைய வேண்டும் என்று கூறுவார்கள் .இவ்வாறு செய்ய தவறினால் செல்பவருக்கும் வீட்டுக்காரருக்கும் துன்பம் உண்டாகும்.
மனித உடலில் வலது பக்கம் மிக முக்கியமானது என்பது யாவரும் புரிந்து கொள்ள முடியும் .ஒரு நபர் வலது காலை அழுத்தி மிதித்து நடக்கும் போது அவர் வெற்றியின் பாதையில் செல்கிறார் என்பது புரிந்து கொள்ளலாம் .ஆன்மீக சிந்தனை இருப்பதை காணலாம் .ஒரு மனிதனை சோதனை செய்து பார்க்கும் போது அவனது வலது பக்கத்திற்கு முக்கிய நரம்புகளின் செயல்பாடுகள் அவனைக் கூடுதல் கடமைகளைச் செய்ய வல்லவனாக்குகின்றது என்பதை காணலாம் .
அதாவது வலதுபாகத்தால் திறமையுடன் செயல்படலாம் என்பது பொருள். மனநிலையும் வலதுபாகத்தை சார்ந்திருக்கிறது. வலது கால் வைத்து பிரவேசித்து அதேபோல் வெளியேறுவதும் சுப லட்சணம் என்று கருதுகின்றோம். மன சாஸ்திரமும் இதை ஆமோதிக்கின்றது.