Kathir News
Begin typing your search above and press return to search.

திருமணமான பெண்கள் ஏன் மெட்டியை அணிய வேண்டும்?

திருமணமான பெண்கள் ஏன் மெட்டியை அணிய வேண்டும்?

திருமணமான பெண்கள் ஏன் மெட்டியை அணிய வேண்டும்?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  7 Nov 2020 5:30 AM GMT

இந்திய தேசம் பல வித கலாச்சாரங்களால் ஆனது. இங்கே ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள், சடங்குகள், விதிகள், பாரம்பரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன.. குறிப்பாக இந்து மரபில் இது போன்ற பல விஷயங்களை நாம் காண முடியும். இதற்கான காரணம், அடிப்படையிலிருக்கும் புராணங்கள், சாஸ்திரங்கள் இவைகளை வலியுறுத்துகின்றன.

இந்து சாஸ்திரத்தில், நாம் உண்ணும் துவங்கி அதிகாலை விழிப்பது முதல் இரவு உறங்குவது வரை அனைத்தும் நம் ஆன்மீக பாதையில் செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்து மரபில் பெண்களுக்கென பிரத்யேக குறிப்புகள் பல இருக்கின்றன.

அதுவும் பெண்கள் அணிகிற ஆடையின் நிறம், ஆபரணங்கள் என அனைத்திற்கும் ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் திருமணமான பெண்கள் போற்றி அணியும் தாலிக்கு நிகரான மற்றொரு ஆபரணம், மெட்டி.

மெட்டி என்பது மோதிரம் போன்ற வடிவிலானது. இதனை மணமான பெண்கள் கால் பாதத்தின் இரண்டாம் விரலில் அணிவார்கள். தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தன்னை அடையாளப்படுத்தும் ஆபரணம் மட்டுமல்ல இது. இதற்கு பின் பெரும் அறிவியல் காரணம் மறைந்துள்ளது.

அதாவது, கால் பாதத்தில் இருக்கும் இரண்டாம் விரலில் ஓடக்கூடிய நரம்பு பெண்களின் கருப்பை உடன் தொடர்புடையது. கருப்பையை கடந்து இதயத்தை சென்று அடைகிறது என சொல்லப்படுகிறது. எனவே இந்த இடத்தில் ஒரு மென்மையான அழுத்தத்தை நாம் உருவாக்குகிற போது அது கருப்பையை பலப்படுத்தும் சாத்தியங்கள் அதிகம். எனவே, மெட்டி போன்ற ஒரு ஆபரணத்தை அணியும் வழியை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு மெட்டி எனும் அணிகலனை பெண்கள் அணிகிற போது, அது கருப்பையை பலப்படுத்தி அவர்களின் மாதவிடாய் காலங்களை முறையாக வைக்க உதவுகிறட்டு என்பது நம்பிக்கை. மேலும் சீரான இரத்த ஓட்டத்திற்கு இது உதவுகிறது.

அடுத்து நம் மரபில் உலோகங்களை தெய்வமாக வழிபடும் பழக்கம் உண்டு. தங்கம் என்பது இலட்சுமியின் அம்சம், அதனாலேயே பெரும்பாலனவர்கள், வெள்ளியில் மெட்டி அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஆன்மீக காரணம் எனினும், இதற்கு பின்னும் ஒரு ஆறிவியல் காரணம் சொல்லப்படுகிறது. வெள்ளி என்கிற உலோகம் ஆற்றலை ஈர்ப்பதில் மிக சிறப்பானதாக திகழ்கிறது. எனவே காலில் ஆணிகிற வெள்ளி மெட்டியினால் பூமியிலிருக்கும் போலார் ஆற்றலை வெகுவாக ஈர்த்து அதனை உடலுக்கு தேவையான அளவில் செலுத்த முடியும் எனவும் சொல்லப்படுகிறது!!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News