பெண்கள் ஏன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது?
பெண்கள் ஏன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது?

நம் பாரம்பரியத்தில் நமஸ்கரித்தல் என்பது புனிதமான காரியம். மூத்தவர்களை காணும்பொழுது, ஒருவருக்கு நன்றி சொல்லும் பொழுது, ஒருவரை வரவேற்கும் பொழுது, இறைவனை வழிபடும் பொழுது ஏராளமான இடங்களில் நமஸ்காரம் செய்து இரு கைகளை கூப்பி வணங்குவது நம் மரபு.
அந்த வகையில் கடவுளை வணங்கும் பொழுது பிரத்தியேகமாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது வழக்கம். சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது ஒரு மனிதனின் மொத்த அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவது. இந்த வகையான நமஸ்காரத்தை தண்டக நமஸ்காரம் மற்ற சில பெயர்களாலும் அழைக்கிறார்கள், சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் பலவிதமான பலன்களின் முக்கியமானது ஒருவருடைய அகங்காரம் அழிந்து அவரிடம் நிதானமான தன்மை உருவாகிறது.
சாஷ்டாங்க நமஸ்கார செய்கிற பொழுது நீங்கள் முழுமையான சரணாகதியை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்கிற பொழுது இறைவனிடம் “எனக்கு நிகழ்கிற அனைத்திற்கும் இனி நீயே கதி” “ என அவர் பாதம் சரணடைந்து நம் உள உணர்வை வெளிப்படுத்த முடியும். அவரிடம் ஆசி பெறும் பொருட்டே இந்த வடிவிலான நமஸ்காரம் வழிபாடுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையிலான நமஸ்காரம் செய்கிற பொழுது அகங்காரம் அழிவதோடு மட்டுமல்லாமல் உடலின் அங்கங்கள் அனைத்தும் தரையில் படுமாறு இருக்கிறது மார்பு, தலை, கை, கால் மூட்டு, உடல், மனம் எண்ணம் என நம்முடைய சகலமும் தரையில் படுமாறு இறைவனை வணங்குகிறோம். ஆனால் இந்த வகையிலான முழுமையான சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியது.
பெண்கள் இந்த வகையிலான சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய பரிந்துரைக்கப்படுவதில்லை புராணங்களின்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்பொழுது பெண்ணினுடைய கருப்பை மற்றும் மார்பு தரையில் படும் வாய்ப்புகள் உண்டு. இந்த இரண்டும் புனிதமான பகுதி என்பதாலும் கருப்பையில் ஒரு உயிர் வளரும் இடம் என்பதாலும் இந்த இரண்டும் தரையில் படக்கூடாது என நம் முன்னோர்கள் சொன்னதன் பேரில் பெண்கள் இரு கால்களை மடக்கி தரையில் தலை படுமாறு நமஸ்காரம் செய்கிறார்கள்.
ஆன்மீக நன்மைகளை தாண்டி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ததால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுகின்றன. அது கை மற்றும் கால் மார்பு பகுதியின் தசைகளை உறுதியாக்குகிறது . எனவே நம் மரபை பொறுத்தவரையில் எந்த ஒரு சின்னஞ்சிறிய விஷயங்களும் வெறுமனே உருவாக்கப்பட்டது அல்ல. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் நம்மிடம் வெளிப்படும் ஒவ்வொரு அசைவிற்கும் பொருள் உண்டு. நம் முன்னோர்கள் அனைத்தையும் ஆராய்ந்து அறிவியல் ரீதியாக, ஆன்மீக ரீதியாக, ஆரோக்கிய ரீதியாக பல நன்மைகள் நேரும் வண்ணம் வடிவமைத்து தந்துள்ளனர்