Kathir News
Begin typing your search above and press return to search.

ஶ்ரீராமர் என எழுதிய கற்கள் மிதந்தது ஏன்? அனுமருக்கு பகவான் சொன்ன ரகசியம்

ஶ்ரீராமர் என எழுதிய கற்கள் மிதந்தது ஏன்? அனுமருக்கு பகவான் சொன்ன ரகசியம்

G PradeepBy : G Pradeep

  |  22 April 2021 11:30 PM GMT

இந்திய புராணங்களில் ஏராளமான கதைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக மஹாபாரதம் மற்றும் இராமயணம் ஆகிய இதிகாசங்களில் நிறைந்திருக்கும் கிளை கதைகளும் ஞான மொழிகள் ஏராளம். இந்த கதைகள், புராணங்களில் பெரும்பாலும் சொல்லப்படுவது ஒன்று சாபத்தின் காரணமாகவோ அல்லது பூமியில் தர்மத்தை நிலைநிறுத்தவோ கடவுள் மனித உருவெடுத்து வருகிறார். நம்மை எல்லாம் காப்பதற்கு அவதாரம் பல எடுக்கிறார்.

இந்த கதைகள் சார்ந்து இன்று அளவும் ஏராளமான கருத்து மோதல்கள், விவாதங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.. ஆன போதும் பெரும்பாலான மக்கள் இதில் இருக்கும் அறநெறியின் மீதான நம்பிக்கையின் பால் ஆதாரங்களை எதிர்நோக்காமல் அதனை முழுமையாக நம்பி ஏற்று கொண்டுள்ளனர்.

இன்று அவ்வாறாக இராமயாணத்தில் வருவதாக சொல்லப்படும் ஒரு கதையை பற்றி தான் காணயிருக்கிறோம்.

வால்மீகி இராமயாணத்தில் சொல்லப்படும் சம்பவம் இது,


இலங்கைக்கு செல்வதற்காக பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்ட போது, பாலம் அமைப்பதற்காக கடலில் வைக்கப்பட்ட கற்கள் எல்லாம் கடலில் மூழ்குவதை கண்டு வருத்தத்தில் ஆழ்ந்திருந்ததாம் வானர சேனை. இதனை கண்ட ஹனுமன் ஒவ்வொறு கல்லிலும் ஶ்ரீ ராமரின் பெயரை எழுதி கடலில் விட்ட போது அவை மிதந்ததாக சொல்லப்பட்டதை கேட்ட ஶ்ரீ ராமரே ஆச்சர்யம் கொண்டாராம்.



இதனை உண்மை தானா என சோதிக்க, ஶ்ரீ ராமரே முயன்று பார்த்துள்ளார். அனைவரும் உறங்கிய பின் கடலருகே வந்த ஶ்ரீ ராமர் சிறு கல்லை ஒன்றை கடலில் வீசினார் அது மூழ்கியது. அதில் அவர் தம் பெயரை எழுதி வீசினார் அது மிதந்தது. இதனை தூரத்திலிருந்து கண்ட ஹனுமர் ராமரை நோக்கி வந்து சொன்னாராம் " ஶ்ரீ ராமா பலம் என்பது உங்களை விடவும் உங்கள் பெயருக்கு அதிகம். இதை நீங்களே இன்று முயன்று உணர்ந்து விட்டீர்கள். கடவுளே உங்களை விடவும் உங்கள் பெயர் வலிமை மிக்கது " என்றாராம். அவர் மேலும் நீங்கள் யாரை கைவிட்டாலும் அவர் மூழ்கிவிடுவார், உங்கள் திருப்பெயராலே அவரை நீங்கள் அரவணைத்து கொண்டால் அவர் கடலில் கூட மிதந்து செல்வார் "என்று சொன்னாராம்.

இதனையே மற்றொரு சமயத்தில் ஶ்ரீ ராமர் வேறு விதமாக சொன்னாராம், எப்போது இந்த உலகம் கோபம், வெறுப்பு, பொறாமை எதிர்மறை எண்ணங்களால் சூழ்ந்து தீமையினுள் மூழ்குகிறதோ அப்போது கடவுளின் பெயரை உச்சர்த்தாலே அங்கே அமைதி நிலவும் . கடவுளின் பெயரை சொல்வதினால் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட முடியும் " என்றாராம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News