Kathir News
Begin typing your search above and press return to search.

விஷ்ணு பரமாத்மா நீல நிறத்தில் இருப்பதன் ஆச்சர்ய காரணம் என்ன?

விஷ்ணு பரமாத்மா நீல நிறத்தில் இருப்பதன்  ஆச்சர்ய காரணம் என்ன?

G PradeepBy : G Pradeep

  |  4 April 2021 12:00 AM GMT

முப்பெரும் தொழிலான படைத்தல், காத்தல் அழித்தலில் காத்தல் தொழிலை செய்து வருபவர். காத்தலின் அதிபதியாக இருப்பதால் இந்த பிரபஞ்சத்தில் அறத்தை காப்பவராக இருக்கிறார். எங்கெல்லாம் தவறுகளும், தீமையும் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் அவதரித்து தர்மத்தை காப்பவராக இருக்கிறார்.

அதர்மம் எங்கு தலை தூக்கினாலும் அது கடவுள்களின் மத்தியிலேயே இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி அங்கே தன் லீலைகளால் தர்மத்தை ஸ்தாபிப்பவர். கருணை கடலென போற்றப்படுபவர்.


புராணங்களில் விஷ்ணு பகவானை உருவகிக்கையில் அவர் நீல நிறத்தில் இருப்பதாக உருவகம் செய்கின்றனர். இந்த நிறம் ஆகாயத்தின் நிறத்தை குறிக்கும். ஆகாயம் என்பது எல்லையற்ற தன்மையின் குறியீடு. அந்த உருவகத்தில் மஹா விஷ்ணுவிற்கு நான்கு கரங்கள் உண்டு. முன்புறமாக இருக்கும் நான்கு கரங்கள் பொருள்தன்மையிலான வாழ்வையும், மற்ற இரு கரங்கள் ஆன்மீக பாதையையும் குறிக்கும்.


அந்த ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு அம்சத்தை அவர் ஏந்தியிருக்கிறார். ஒரு கரத்தில் தாமரையை ஏந்தியிருக்கிறார். இது தூய்மையான தன்மையை ஆழகியலை உணர்த்துகிறது. மற்றொரு கரத்தில் சங்கினை ஏந்தியிருக்கிறார் இது பிரபஞ்ச உருவாக்கத்தின் அடிப்படை ஒலியான ஓம் எனும் ஒலியை குறிப்பதாக அமைந்துள்ளது. மற்றொரு கரத்தில் சக்கரம் இருக்கிறது இது சாதுர்யம், மற்றும் மாயை அழிக்கும் ஆயுதமாக உள்ளது.

அவர் குறித்த மற்றொரு முக்கிய உருவகம், அவர் பரந்து விரிந்த கடலில் நூறு தலை கொண்ட ஆதிஷேசனின் படுக்கையில் படுத்திருப்பதை போன்ற காட்சி. இது உணர்த்துவது ஆயிரக்கணக்கான கடல் அலை போல மனதிற்குள் ஆசைகள் தோன்றினாலும் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராய், மஹா விஷ்ணு இருக்கிறார். ஒவ்வொரு முறை தீமை தலை தூக்கும் போதும் ஒவ்வொரு அவதாரம் எடுத்தவர். அவ்வாறாக ஒன்பது முறை அவர் அவதாரம் நிகழ்ந்துள்ளது.


தற்போது நடைபெறும் கலியுகத்தில் நிச்சயம் ஒரு முறை விஷ்ணு அவதரிப்பார் என்பது இந்துக்களின் பரந்து ப்பட்ட நம்பிக்கை. முக்தியின் கடவுளாக இருக்கும் மஹாவிஷ்ணு தர்மம், அன்பு போன்ற பண்புகளை ஒவ்வொரு அவதாரத்தின் மூலமும் மனிதர்களின் ஸ்தாபித்தவர். அதற்கான பெரும் உதாரணங்கள் இரண்டு மஹாபாரதம் மற்றும் இராமாயணம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News