Kathir News
Begin typing your search above and press return to search.

சமணர்களால் நிர்வகிக்கப்படும் அதிசய சிவாலயம்! தர்மத்தை ஸ்தாபிக்கும் தர்மஸ்தலம்!

சமணர்களால் நிர்வகிக்கப்படும் அதிசய சிவாலயம்! தர்மத்தை ஸ்தாபிக்கும் தர்மஸ்தலம்!

சமணர்களால் நிர்வகிக்கப்படும் அதிசய சிவாலயம்! தர்மத்தை ஸ்தாபிக்கும் தர்மஸ்தலம்!
X

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  5 Feb 2021 1:07 PM IST

கர்நாடகாவின் தக்‌ஷின் கன்னடா எனும் மாவட்டத்தில் நேத்ராவதி ஆற்றின் கரை ஓரத்தில் அமைந்துள்ளது தர்மஸ்தலா. தர்மஸ்தலா கோவில் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டது. இங்கு சிவபெருமான் மஞ்சுநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் தர்மத்தை காக்கும் தெய்வங்களாக, காலராகு, காலார்கயி, குமாரசுவாமி மற்றும் கன்யாகுமரி இருக்கின்றனர்.

இந்த கோவிலின் ஒரு விசித்திரம் யாதெனில், இந்து கோவிலான தர்மஸ்தலாவை நிர்வகிப்பது சமணர்கள். எனவே மத சார்பின்மையின் அடையாளமாக விளங்குகிறது இந்த கோவில். இந்த கோவிலில் மற்றொரு அங்கமாக, சமண மதத்தின் தீர்த்தங்காரரையும் வழிபடுகின்றனர். இங்கே நிகழும் லக்‌ஷதீபம் என்கிற விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் கிட்டதட்ட தினந்தோரும் 10000 யாத்ரீகர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். இதை தவிர இலட்சக்கணக்கான பக்தர்கள் வரும் முக்கிய ஸ்தலமாக இந்த இட்ம் விளங்குகிறது.

இந்த கோவிலின் முக்கிய சிறப்பம்சம், இங்கிருக்கும் அன்ன தான கூடும். எத்தனை இலட்சம் பக்தர்கள் வந்தாலும் இங்கே உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டேயிருக்கிறது. இந்த கோவில் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில், 800 ஆண்டுகளுக்கு முன்பு தர்மஸ்தலம் எனும் இந்த இடம் குடுமா என்ற பெயரில் இருந்தது.

இங்கே சமண மதத்தை சேர்ந்த பிர்மன்னா மற்றும் அவருடைய மனைவி அம்மு பல்லால்தி வசித்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் பெயர் நெல்லயாடி பீடு. மிகவும் அன்பானவர்கள் தர்மத்தின் தேவதைகள் மனித ரூபம் கொண்டு இவர்கள் இல்லத்திற்கு வந்த போது. இவர்களின் இன்முகமான உபசரிப்பில் மகிழ்ந்தனர் தேவதைகள்.

அதனை தொடர்ந்து பிர்மன்னாவின் கனவில் தோன்றிய தேவதைகள். தங்களின் வருகையை விளக்கி, தங்கள் வருகைக்கான காரணத்தை விளக்கினர். பின் இந்த இல்லத்தை தர்மத்திற்காக அர்பணித்து, தர்ம வழியை அனைத்து இடங்களிலும் பரப்புமாறு அறிவுருத்தினர்.

அதன்படியே அந்த இல்லம் நீங்கி அங்கேயே தர்ம தேவதைகளை வழிபட தொடங்கினார். இது இன்று அளவும் தொடர்ந்து நிகழ்கிறது. இந்த கோவிலின் தலைவராக நியமிக்கப்படுபவரை ஹெக்கடே என அழைக்கின்றனர். யார் ஒருவர் ஹெக்கடேவாக தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவர் மஞ்சுநாதரின் பிரதிநிதியாகவே பாவிக்கப்படுவார்.

அவர் சொல்லும் தர்மத்தை முழு மனதுடன் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். கடவுளின் ஆராவால் அவர் சூழப்பட்டிருப்பதால் அவர் மஞ்சுநாதரின் குரலாகவே கருதப்படுகிறார். இவர் நான்கு முக்கிய தானங்களை மக்களுக்கு வழங்குகிறார் அவை அன்னதானம், அவுஷத தானம் எனும் மருத்துவ் உதவி, வித்ய தானம் எனும் கல்வி உதவி, மற்றும் அபய தானம் எனும் பயத்திலிருந்து விடுதலை ஆகியவற்றை வழங்குகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News