Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவரா? எனில் இவற்றை தவறியும் செய்யக்கூடாது!

வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவரா? எனில் இவற்றை தவறியும் செய்யக்கூடாது!

வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவரா? எனில் இவற்றை தவறியும் செய்யக்கூடாது!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  15 Dec 2020 6:00 AM GMT

சிலர் பெரு முயற்சி செய்து வீடுகளில் சிவலிங்கத்தை ஸ்தாபித்திருப்பிருப்பார்கள். வீட்டின் பூஜையறையில் சிவனின் திருவுருவப் படத்தை பெரும்பாலானோர் வைத்திருப்போம். சிவலிங்கத்தின் திருவுருவப் படத்தையும் வைத்திருப்பார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே, சிவ லிங்கத்தை முழுமையாக நிறுவியிருப்பார்கள். அவ்வாறு வீடுகளில் சிவலிங்கம் வைத்திருக்கிறீர்கள் எனில், இதை தவறியும் செய்து விடாதீர்கள்.

சிவலிங்கத்தை வழிபாட்டுக்கு உகந்த இடமன்றி வேறு இடத்தில் வைக்க வேண்டாம். வேறு எந்த காரணம் காட்டியும் அவருக்குரிய பூஜையை தவறவிடக்கூடிய வகையிலான இடத்தில் சிவபெருமானை வைக்க வேண்டாம். அடுத்து, ஒருபோதும், மஞ்சளை குருமார்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி சிவலிங்கத்திற்கு அர்பணிக்க வேண்டாம். இயல்பில் மஞ்சள் என்பது அம்பிகையின் அம்சம் ஆகும்.

அடுத்து, குங்குமத்தையும் முறையான வழிகாட்டுதல் இன்றி அர்பணிக்க கூடாது. குங்குமம் என்பது தங்களின் கணவன் மார்களின் ஆயுள் சிறப்பாக அமைவதற்காக, பெண்கள் தேவியை வழிபடும் ஒரு வழி. சிவபெருமான் அழித்தலுக்கான கடவுள் , எனவே காத்தலுக்காக வழிபடும் அம்சத்தை அழிக்கும் கடவுளுக்கு அர்பணிக்க வேண்டாம் என சொல்லப்படுவதுண்டு.

நீங்கள் தவிர்க்க முடியாத காரணத்திற்காக விட்டின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சிவலிங்கத்தை மாற்றுகிறீர்கள் எனில், அவ்வாறு மாற்றும் முன்பாக ஒரு முறை கங்கை நீரிலும், குளிர்ந்த பாலிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நிகழ்த்த வேண்டும் என சொல்லப்படுகிறது. சிவனுக்கு அர்பணிக்கப்படும் பால் குளிர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். சூடான அல்லது வெதுவெதுப்பான பாலை அர்பணிக்ககூடாது.

சிவலிங்கத்தின் மீது காலை மாலை மற்றும் தினசரி அவர் சிரசின் மீது நீர் விழும் வகையிலான நீர் ஊற்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் சிவலிங்கத்தின் அருகாமையில், தேவியின் விக்ரகம் இருப்பதை உறுதிப்படுத்துவது கூடுதலான நன்மைகளை வழங்கும். தவறியும் சிவலிங்கத்திற்கு துளசியிலைகளை முறையான வழிகாட்டுதல் இன்றி அர்பணிக்க வேண்டும். ஈசனுக்கு உகந்தது வில்வ இலைகளே. முடிந்த அளவில் ஈசனுக்கு சந்தன காப்பு சாற்றுவது உகந்தது. ரெளத்திர மேனியரை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த சந்தின காப்பு.

நீங்கள் தேங்காயை ஈசனுக்கு சமர்பிக்கலாம், ஆனால் முறையான வழிகாட்டுதலின்றி தேங்காயின் நீரை நேரடியாக சிவலிங்கத்திற்கு அர்பணிக்க வேண்டாம் என சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் சில வழிமுறைகள், இவற்றை முறையான வழிகாட்டுதலின் பேரில், குருமார்களின் நெறிமுறைகளை பெற்று நாம் சரியான வகையில் நிருவுவது நல்ல பலன்களை தரும்.

நன்றி ஸ்பீக்கிங் ட்ரீ

Next Story
கதிர் தொகுப்பு
Trending News