ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து டெல்லி அணியின் அஸ்வின் விலகல்.!
By : Pravin Kumar
14வது ஐபிஎல் சீசன் இந்தாண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த சீசனில் இதுவரை 20லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 (+1.612) புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது.இதையடுத்து டெல்லி அணி 8 (+0.334) புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்திலும், பெங்களூர் அணி 8 (+0.096) புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. டெல்லி அணியின் இளம் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த சீசனில் தனது அணிக்காக 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார்.
இதன்மூலம் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக தற்போது இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் இணைந்திருக்கிறார். இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஸ்பின் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேற இருப்பதாக கூறியிருக்கிறார்.இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டரில் ""நான் இந்த ஆண்டு ஐபிஎல்லில் இருந்த ஓய்வெடுக்க போகிறேன். எனது குடும்பமும் நீட்டிக்கப்பட்ட குடும்பமும் கோவிட்-19க்கு எதிராக போராடுகின்றன. இந்த கடினமான காலங்களில் நான் அவர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன்.
விஷயங்கள் சரியான திசையில் சென்றால் மீண்டும் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி ! டெல்லி கேப்பிடல்ஸ்" என்று ட்விட் செய்திருக்கிறார்.இதனை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளது. அஸ்வினின் விலகல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.