Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்சிபி அணியில் இருந்து மேலும் இரண்டு வீரர்கள் விலகல்.!

ஆர்சிபி அணியில் இருந்து மேலும் இரண்டு வீரர்கள் விலகல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  27 April 2021 7:30 AM GMT

14வது ஐபிஎல் லீக் தொடர் தற்போது நடந்து கொண்டு வருகிறது. மொத்தம் 60 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இதுவரையில் இருபத்தி ஒரு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தொடர் ஆரம்பிக்க படுவதற்கு முன்னர் இருந்ததை விட தற்போது கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனாவின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு லட்சத்தை தொட போகிறது என்றே சொல்லலாம்.பலி எண்ணிக்கைகளும் அதிகமாகிக் கொண்டே செல்லும் வேளையில், மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் இது மாதிரியான வேளையில் ஐபிஎல் தொடர் அவசியமா என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். மறுபக்கம் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக பாதியில் நிறுத்தப்பட போகிறது என்கிற வதந்திகளும் பரவி வருகின்றன.


இந்நிலையில் தனது குடும்பத்தாருடன் இந்த இக்கட்டான சூழலில் உடன் இருக்க வேண்டும் என்று டெல்லி அணியின் வீரர் அஷ்வின் இந்த தொடரில் இருந்த்து விலகினார்.இந்நிலையில் அவர்களை தொடர்ந்து 2 பெங்களூரு அணியை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதனுடைய 5 போட்டிகளில் இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆடம் ஜாம்பா இதுவரை எந்த போட்டியிலும் விளையாடவில்லை ஆனால் கேன் ரிச்சர்ட்சன் ஒரே ஒரு போட்டியில் விளையாடினார்.இவர்கள் இருவரும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பரவல் காரணமாக தங்களது சொந்த காரணங்களுக்காக நாடுகளுக்கு திரும்ப போவதாக விருப்பத்தை தெரிவித்து இருந்தனர்.


இவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்ட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இருவரையும் அவர்களது நாட்டுக்கு செல்ல அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், இருவருக்கும் பாதுகாப்பான பயணத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளது.இதுவரை 20 போட்டிகள் மும்பை மற்றும் சென்னை மைதானங்களில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில் அதற்கு அடுத்தபடியாக அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானங்கள் இனி வரும் போட்டிகள் நடக்க இருக்கின்றன. குறிப்பாக டெல்லியில் அதிகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி பாதுகாப்பாக நடைபெறும் என்று சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News