Kathir News
Begin typing your search above and press return to search.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெறுத்து வாங்கிய ப்ரித்திவ் ஷா.!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெறுத்து வாங்கிய ப்ரித்திவ் ஷா.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  30 April 2021 7:15 AM GMT

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் இதுவரை 25 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் நேற்று(ஏப்29) நடைபெற்ற 25வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பண்ட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் குவித்தது.இதில் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 45 ரன்களும் சுப்மன் கில் 43 ரன்களும் அடித்திருக்கிறார்கள்.


டெல்லி பவுலர் லலித் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதையடுத்து 155 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டெல்லி தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 82 ரன்களும், தவான் 46 ரன்களும அடித்திருக்கிறார்கள். கொல்கத்தா சார்பாக பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். டெல்லி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News