கொரோனா கொல்லுயிரிக்கு தந்தையை பறிகொடுத்த பியூஷ் சாவ்லா! அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியினர்!
By : Muruganandham
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்பால் காலமானார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சார்பாக விளையாடி வரும் பியூஷ் சாவ்லா, தனது தந்தை இறந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட எனது தந்தை பிரமோத் குமார் சாவ்லா, மே 10 அன்று காலமாகியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். 32 வயது பியூஷ் சாவ்லா, இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 25 டெஸ்டுகள், 7 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
2004-05 ஆட்டகாலத்தில் இங்கிலாந்தின் பதினொன்பது வயதுக்கு கீழானவர்களுக்கான அணிக்கெதிரே, அண்டர்-19கீழ் அணியில் தமது ஆட்டத்தைத் துவங்கினார்.
2005-06 காலத்தில் இந்தியாவின் இரண்டாம்நிலை அணிக்கு ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டிகளில் இந்தியாவின் முதல்நிலை அணியுடன் ஆடியபோது இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
இறுதிப் போட்டியில் இந்திய முதல்நிலை அணியுடன் ஆடிய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரை கூக்ளி பந்து மூலம் வீழ்த்தி ஆட்டமிழக்கச் செய்தது இவரது ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அதே ஆட்டத்தில் முதல்நிலை மட்டையாளர்களான யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி ஆகியோரையும் வீழ்த்தினார்.