சுடச்சுட தயாரான இந்திய கிரிக்கெட் அணியின் 'பி' டீம்! கேப்டன் யாரென தெரிந்தால், அசந்தே போவோம்!
By : Muruganandham
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஒருநாள் தொடர் ஜூலை 13, 16, 19 ஆகிய தேதிகளிலும், இருபது ஓவர் தொடர் ஜூலை 22, 24, 27 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. தற்போது இலங்கை செல்லும் அணியில், கோலி, ரோகித், பும்ரா, கே.எல்.ராகுல், ஜடேஜா என மிக முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை.
அவர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால், தவான், பிருத்வி ஷா, சூரியகுமார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக், குர்ணால், புவனேஷ்வர் குமார், சைனி, தீபக் சாஹர், சாஹல், ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் உட்பட இன்னும் சில இளம் வீரர்கள் அடங்கிய படை, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார்கள் என தெரிகிறது.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 'பி' டீமை அனுப்பும் திட்டத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னதாக வெளிப்படுத்திய நிலையில், அது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனுக்கான பரிசீலனையில் ஹர்திக் பாண்ட்யா பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் மூத்த மற்றும் அனுபவ வீரரான தவனுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.