Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவோடு அவ்வளவு தான்! இனிமேல் விளையாட மாட்டேன் - நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் தீர்க்கமான முடிவு!

இந்தியாவோடு அவ்வளவு தான்! இனிமேல் விளையாட மாட்டேன் - நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் தீர்க்கமான முடிவு!

MuruganandhamBy : Muruganandham

  |  14 May 2021 2:00 AM GMT

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான பிஜெ வாட்லிங் நியூசிலாந்து அணிக்காக 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3773 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 28 ஒரு நாள் போட்டிகளிலும் ,5 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த இறுதிப் போட்டி முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தாம் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடனும் அதிகமான நேரத்தை செலவிட உள்ளேன். உலகத் தரம் வாய்ந்த பல வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளேன்.

அவர்களின் மூலமாக எனக்கு நிறைய உதவிகளும் கிடைத்தன, நான் எப்போதும் அதற்கு நன்றியுடையவனாக இருப்பேன் என்று அவர் கூறினார்.

தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியையே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்க வேண்டுமென்று முடிவு செய்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News