இவரு இல்லைன்னா இன்னைக்கு இந்தியா டீம் கிடையாது - அணு அணுவா செதுக்கிய ஜாம்பவான்!
By : Muruganandham
ஒவ்வொரு நாட்டிலும், கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களை அதிகம் உருவாக்குவதில், அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதே பாணியை இந்தியாவும் கையாண்டு வருகிறது.
இளம் வீரர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது . இதற்கு முக்கிய காரணமாக திகழ யார் காரணம் என்று கேட்டால், எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ஒருவரை நோக்கி கை நீட்டுகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களை உருவாக்க, அவர்கள் என்னென்ன முயற்சிகளை செயல்படுத்தி வந்தனரோ, தற்போது அவரும் இந்திய கிரிக்கெட் அணியில் அதே முறையை செயல்படுத்தி வருகிறார்.
அதோடு நல்ல திறமை வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்குகிறார். இதற்கு முன்பாக கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களை உருவாக்குவதில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள்தான், முன்னிலையில் இருந்து வந்தன. தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறி , இந்திய அணி இளம் வீரர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இளம் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி அந்தத் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காக இருந்தனர்.
இப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. நம்ம ராகுல் டிராவிட் தான். இந்திய அணியை அணு அணுவாக செதுக்கிய பெருமை ராகுல் டிராவிட்டையே சேரும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரேக் சாப்பல் பாராட்டி பேசியுள்ளார்