Kathir News
Begin typing your search above and press return to search.

அரே ஜட்டு பாய்..! நீங்களா இது..? இங்கிலாந்து சீரியஸ் போவதற்கு முன்னால் ஆளே அடையாளம் தெரியாமல் லுக்கை மாற்றிய ரவீந்திர ஜடேஜா!

அரே ஜட்டு பாய்..! நீங்களா இது..? இங்கிலாந்து சீரியஸ் போவதற்கு முன்னால் ஆளே அடையாளம் தெரியாமல் லுக்கை மாற்றிய ரவீந்திர ஜடேஜா!

MuruganandhamBy : Muruganandham

  |  21 May 2021 3:21 PM GMT

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு முழுமையாக தயாராக உள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளார்.

மே 24 முதல், 8 நாள் தனிமைப்படுத்தலில் இருக்கும் அவர், ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள புறப்படுகிறார். தற்போது புறப்படுவதற்கு முன்பு ஜடேஜா தனது ஸ்டைலை மாற்றியுள்ளார்.

தனது புதிய தோற்றத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் அவரது புதிய லுக்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது.



ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் 6 வாரங்கள் அணியில் இருந்து வெளியேறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா பங்கேற்கவில்லை. ஐபிஎல் மூலம் மீண்டும் பார்முக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறும். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News