Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!

ThangaveluBy : Thangavelu

  |  29 May 2022 1:46 PM GMT

11வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான் நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட அணிகள் சூப்பர் 4 எனப்படும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

மேலும், இந்த சுற்றில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுகிறது.

இந்நிலையில், சூப்பர் 4வது சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானுடன் இன்று மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபாரமாக வெற்றியை பெற்றது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News