ஆசிய வாள்வீச்சு போட்டி... தமிழக வீராங்கனை பவானி தேவி வரலாற்று சாதனை...
By : Bharathi Latha
ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக சென்னையில் சேர்த்த தமிழக வீராங்கனை பங்கேற்று இருக்கிறார். நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் பெண்களுக்கான ஷாப்பரை பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை பவானி தேவி, கஜகஸ்தானின் வீராங்கனை எதிர்கொண்டு இருந்தார். திரில்லிங்கான நடந்த இந்த மோதலில் சென்னை சேர்ந்த பவானி தேவி 14க்கு 15 என்று புள்ளி கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
இருப்பினும் அவர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியதால் அவருக்கும் வெண்கல பதக்கம் தற்போது கிட்டி இருக்கிறது. இதன் மூலம் ஆசிரியர் வாழ்வுரித்து சாம்பியன்ஷி போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்து இருக்கிறார். முன்னதாக அவர் கால் இறுதியில் உலக சாம்பியனும் நம்பர் ஒன் வீராங்கனைமான ஜப்பானில் சேர்ந்த மிசிகா என்பவரை 15க்கு 10 என்று புள்ளி கணக்கில் வீழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய சரித்திரம் படைத்த பவானி தேவிக்கு இந்திய வாள் வீச்சு சங்கம் செயலாளர் ராஜீவ் மேத்தா தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து இருக்கிறார்..இது இந்திய வாள் வீச்சு போட்டிக்கு பெருமைக்குரிய நாளாகும். இதற்கு முன்பு யாரும் செய்யாததை பவானி தேவி சாதித்து இருக்கிறார். மேலும் ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்று முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்திய இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Input & Image courtesy: Maalaimalar