மகளிருக்கான தேசிய கால்பந்து தொடர்... தமிழக அணி சாம்பியன் பட்டம்...
By : Bharathi Latha
27 வது தேசிய ஜூனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடந்து இருக்கிறது. இந்த போட்டியில் சுமார் 32 அணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர். இதனுடைய இறுதி ஆட்டத்தில் தமிழக அணி அரியானா அணியை எதிர்கொண்டு இருந்தது. இதில் இரு அணிகளும் தொடக்க முதல் தாக்குதல் பாணியில் கையாண்டுதல் ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பந்து அதிக நேரம் தமிழக அணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது முதல் பாதையில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இரண்டு அணிகளும் சிறப்பாக தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐம்பதாவது நிமிடத்தின் போது அரியானா 10 என்று போல் கணக்கில் முன்னிலை பெற்றது தமிழக வீரர்கள் துர்கா தேவி எல்லை பகுதியில் பந்தை தடுத்து நிறுத்த முடிகின்ற பொழுது அவரது காலில் பட்டு கோல்வளைக்குள் புகுந்து கோலாக மாறியது. மேலும் அணியை சமாளித்து இந்தியா தமிழக அணி இரண்டாவது ஆட்டத்தின் போது இரண்டிற்கு ஒன்று என்ற கோல்களுடன் வீழ்த்தியது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகம் இந்த வெற்றியை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறது. தமிழக மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
அமிர்தசரஸில் நடைபெற்ற மகளிருக்கான தேசிய கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தமிழக மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் . வருங்காலங்களில் தமிழக வீராங்கனைகள் தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்று சர்வதேச அளவில் பல கோப்பைகளை வென்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார்கள்.
Input & Image courtesy: News