Kathir News
Begin typing your search above and press return to search.

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேப்பா... இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் இவரா?

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேப்பா... இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் இவரா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 July 2023 3:10 AM GMT

இந்திய அணியின் தற்போது வரை பயிற்சி ஆளராக ராகுல் டிராவிட் அவர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் தற்பொழுது நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருடன் அவருடைய ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இவருக்கு அப்புறம் யார் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்று ஒரு கேள்வி தற்போது வரை இருந்து வந்தது. அதற்கு தற்போது பதில் கிடைக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் புதிய ஒரு முடிவை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இது நம்ம லிஸ்ட்லே இல்லையப்பா என்று சொல்லும் அளவிற்கு அந்த ஒரு நபர் இடம்பெற்று இருக்கிறார்.


இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இவர் இருக்கிறார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கி இருக்கிறது. ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு தகுதியான பயிற்சியாளரை பிசிசிஐ நிர்வாகம் தேடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னரே இந்த முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளது.


இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக மாடலில் ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு என்று ஒரு பயிற்சியாளரையும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று பிரத்யேக மற்றொரு பயிற்சியாளரையும் நியமிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஏனென்றால் உலகக்கோப்பைக்கு பின் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி கட்டமைக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News