ஒரே ஆண்டில் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளா.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு பஞ்சமே இருக்காது..
By : Bharathi Latha
தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் போட்டி கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது அதற்கு அடுத்த ஆறு மாதத்திற்குள் ஐசிசி T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஒரு போட்டி முடிந்த ஆறு மாதத்திற்கு பிறகு மற்றொரு உலகக் கோப்பை போட்டி நடைபெற இருப்பதாக தற்போது அட்டவணை மற்றும் தகவல்கள் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக ICC ஆலோசனை தீவிரமாக மேற்கொண்டு இருக்கிறது.
இதில் 2024 T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜூன் நான்காம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில் அமெரிக்காவில் ஃப்ளோரிடா, டல்லாஸ்,நியூயார்க் ,மோர்சிவெயில் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதாவது இதற்கு முன்பு இல்லாத வகையில் இந்த போட்டியில் 20 அணிகள் விளையாட இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் என மொத்தம் நான்கு பிரிவுகள் லீக் சுற்றில் பிரிக்கப்பட உள்ளது. இதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளாக நான்கு அணிகள் களமிறங்கும்.அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். அனேகமாக இவை அமெரிக்காவில் நடத்தப்படலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: News