அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் களம் இறங்குகிறார் பும்ரா.. அதுவும் கேப்டனாகவா?
By : Bharathi Latha
தற்போது இந்திய அணி மிகவும் சிறப்பாக தன்னுடைய ஆட்டங்களை வெளிகாட்டு வருகிறது. இருந்தாலும் இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரர்கள் பலரும் காயம் காரணமாக பல போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்து வந்தார். பிறகு கடந்த காலங்களில் அவர் ஓய்வு நிலையில் இருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று சர்வதேச ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
குறிப்பாக இந்திய மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகின்ற 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் இரண்டு ஆட்டங்கள் அக்டோபர் 20 மற்றும் 23ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. அயர்லாந்து தொடருக்காக இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆபரேஷன் செய்து தற்போது குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்புகிறார் என்று மகிழ்ச்சியான செய்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அது மட்டும் கிடையாது அவருக்கு கேப்டன் பதவியும் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சி ஆட்டங்களில் பந்து வீசிய பும்ரா உடல் தகுதி குறித்து கிரிக்கெட்ட அகாடமி திருப்தி தெரிவித்து இருக்கிறது. மேலும் அவர் உடல் தகுதிக்கு தேர்ச்சி பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவர் விளையாடும் முதல் போட்டி இதுவாக தான் இருக்கும்.
Input & Image courtesy: News