ஆசிய சேம்பியன்ஷிப் ஹாக்கி தொடர்.. இந்திய அணி அபாரம்..
By : Bharathi Latha
16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி சென்னையில் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இது நடைபெறும் காரணத்தின் காரணமாக பல்வேறு இளைஞர்கள் இந்த போட்டியை காண ஆர்வமாக ஸ்டேடியத்திற்கு வந்து இருந்தார்கள். தொடக்க விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இந்த போட்டியை தொடங்கி வைத்தார்.
முதல் ஆட்டத்தின் போது சீனா மற்றும் இந்தியா அணி மோதிக்கொண்டது. இதில் இந்திய அணி 7-2 என்ற கோல் கடக்கில் சீனாவை வீழ்த்தி போட்டியை அட்டகாசமாக தற்போது அவர்கள் துவங்கி இருக்கிறார்கள். முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்க இருக்கிறது. தொடர்ந்து விளையாடிய மற்ற நாட்டின் அணிகள் குறிப்பாக தென் கொரியா 35 நிமிடங்களில் ஜப்பானுக்கு தோல்வியை தந்தது.
அது மட்டும் கிடையாது, தொடர்ந்து அடுத்த இரண்டாவது ஆட்டத்தில் தரவரிசையில் பத்தாவது இடத்தில் உள்ள மலேசியா 16-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் தொடங்கியது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தது நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக பாகிஸ்தான் 15 வது நிமிடத்தில் கோல் போட்டது. இருந்தாலும் மலேசியா அணியினர் பாகிஸ்தானை விட நன்றாக விளையாடுடி வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள். இறுதியாக இந்திய மற்றும் சீனா அணிகள் மோதிகொண்டது. இதில் இந்தியா சீனாவிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
Input & Image courtesy: News