உலக சாம்பியன்ஷிப்பில் மல்யுத்த போட்டி.. இந்தியாவின் மகளிர் அணி வெற்றி மகுடம்..
By : Bharathi Latha
2023 உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் மல்யுத்த அணி பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 20 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் மகளிர் மல்யுத்த அணி பட்டத்தை வென்றதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக 20 வயதிற்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் பெறுவது என்பது சற்று கடினமான விஷயம் தான். அவற்றை இந்திய மகளிர் அணி நிகழ்த்தி இருக்கிறது இந்தியாவிற்கு மற்றொரு மணி மகுடம்.
20 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் மகளிர் மல்யுத்த அணி பட்டத்தை வென்றதற்காக இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "இந்திய மகளிர் மல்யுத்த வீரர்களுக்கு ஒரு மகத்தான வெற்றி! நமது அணி 2023 யு-20 உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் மல்யுத்த அணி பட்டத்தை வென்றுள்ளது, 7 பதக்கங்களுடன் இணையற்ற செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது, அவற்றில் 3 தங்கம். இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஆன்டிம் தக்கவைத்துக் கொண்டது மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று!
இந்த மகத்தான வெற்றி நமது வளர்ந்து வரும் மல்யுத்த வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முழு உறுதி மற்றும் அசாதாரண திறமையின் உருவகமாக நிற்கிறது" என்று கூறினார். மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு என்று தனித்துவமாக பயிற்சிகளை அளித்த அவர்களை மெருகேற்றி வருவதும் உலக அரங்கில் இந்தியாவின் திறன் வெளிப்படுவதும் இதன் மூலம் தெரிய வருகிறது.
Input & Image courtesy: News