இந்திய கேப்டன் பும்ரா தலைமையில் இளம் வீரர்கள் சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
By : Bharathi Latha
இந்திய கிரிக்கெட் அணிக்கு அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட முதல் ஆட்டத்தில் தற்போது டாக்குவார் லிவீஸ் விதிப்படி இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா அயர்லாந்து மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 2 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த கிரிக்கெட் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால் இதில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று இருக்கிறார்கள். கடந்த நாட்களில் காயம் காரணமாக எந்த ஒரு போட்டிகளிலும் பங்கு ஏற்காத பூம்ரா இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பதவி வகிக்க இளம் வீரர்கள் படை சிறப்பாக விளையாடி வருகிறது.
காயத்திலிருந்து மீண்டும் இந்த தொடரின் மூலம் மறு பிரவேசம் செய்து இருக்கிற வேகப்பந்து வீச்சாளர் பிரசந்தி கிருஷ்ணா முதல் இரண்டு ஆட்டங்களில் தலா இரண்டு விக்கெட் விதம் வீசி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை எடுத்தார்கள். இருந்தாலும் தாங்கள் தங்களது உடல் தகுதியை இன்னும் சோதித்துப் பார்க்க இன்றைய ஆட்டம் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
Input & Image courtesy: News