Kathir News
Begin typing your search above and press return to search.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. அறிமுகம் செய்து வைத்த முதல் இந்திய நடிகை மீனாவா?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. அறிமுகம் செய்து வைத்த முதல் இந்திய நடிகை மீனாவா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Aug 2023 4:24 AM GMT

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மிகவும் அருமையாக தொடங்குகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மாதம் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு தற்பொழுது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறார் தமிழ் நடிகை மீனா அவர்கள். நடிகை மீனா, 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய உலக கோப்பை போட்டியின், 'உலக கோப்பையை' அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


இதற்காக பல்வேறு தரப்பில் இருந்து இவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணின் நடைபெற இருக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்க ஐசிசி முன்முயற்சி எடுத்து இருக்கிறது. அதாவது உலக கோப்பையை அறிமுகம் செய்து வைக்க இந்திய நடிகையான மீனா அவர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார். அதன் பெயரில் நேற்று முன்தினம் அவர் உலக கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலக கோப்பை 2023 அறிமுகம் செய்து வைத்தார்.


இந்த உலக கோப்பையை நடிகை மீனா பாரீசில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ’உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன். என்று மிகவும் பெருமையாக தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News