Kathir News
Begin typing your search above and press return to search.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு..

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Sep 2023 3:27 AM GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் இதற்கு இந்திய கிரிக்கெட் கவுன்சில் முழுமையான தீவிர ஈடுபாடுகளை செய்து வருகிறது பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பைக்கு மக்களிடையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டு இருக்கிறது. நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா வெளியிட்ட பத்துக்கு மேற்பட்ட நாடுகள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. அதற்காக மற்ற நாடுகளை சேர்ந்த அணியினர் இந்தியாவிற்கு வருகை தரவும் இருக்கிறார்கள்.


அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் இந்த போட்டி நடக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்கக்கல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இந்தியாவை சென்னையில் அக்டோபர் எட்டாம் தேதி எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை போட்டிக்கான பதினைந்து பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் வெளியிடப்பட்டு இருந்த 18 பேர் கொண்ட முதல் கட்ட அணி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.


மேலும் அதிகாரப்பூர்வமான உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அணி அறிவிப்பிற்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் இது பற்றி கூறும் பொழுது காயுமடைந்த வீரர்கள் வரும் பாரங்களில் அணிக்கு திரும்பும் திரும்புகிறார்கள். அவர்களின இந்தியாவிற்கு எதிராக ஒரு நாள் தொடரில் அவர்கள் களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News