ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி.. இந்திய வீரர்கள் பங்கேற்பதில் ஏற்பட்ட புதிய சிக்கல்..
By : Bharathi Latha
ஐ எஸ் எல் கால்பந்து போட்டி கொச்சியில் வருகிற 21 ஆம் தேதி தொடங்குகிறது. அந்த சமயத்தில் ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியும் நடைபெறுவதால் இந்திய வீரர்களுக்கு தற்போது புரிந்து புதிய ஒரு பிரச்சனை மற்றும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 12 அணிகள் பங்கிற்கும் பத்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வருகின்ற 21-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த ஒரு போட்டியில் 12 அணிகள் வருகின்ற 21ஆம் தேதியில் கொச்சியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் போட்டியை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த போட்டி குழுவினரும் நேற்று இரவு இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்களை வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா மற்றும் பெங்களூரு மோத இருக்கிறது. டிசம்பர் 29ஆம் தேதி வரை முதல் பாதி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. தினசரி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் இரண்டு போட்டிகள் இருக்கும் நாளில் முதலாவது ஆட்டம் மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது. சர்வதேச கால்பந்து போட்டியை கருத்தில் கொண்டு அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் இருபதாம் தேதி வரை நவம்பர் எட்டாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையும் போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் 19ஆவது ஆசிய கிரிக்கெட் போட்டி சீனாவில் நடைபெற நடைபெற இருக்கிறது. சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற்றது. இதில் கால்பந்து போட்டி வருகின்ற 19ஆம் தேதி முதல் அக்டோபர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய போட்டிக்கு இடையில் 22 பேர் கொண்ட இந்திய கால்பந்த அணி பங்கே இருக்கிறது இந்த அணியில் பெங்களூரு எப்.சி.யிலிருந்து ஆறு வீரர்களும் மும்பை சிட்டியிலிருந்து மூன்று வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். எனவே இரண்டு போட்டிகளிலும் வீரர்கள் ஒரே சமயத்தில் எப்படி பங்கேற்க முடியும் என்று ஒரு பிரச்சனை எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: News