Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு சேர்ந்த மற்றொரு மணி மகுடம்..

புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு சேர்ந்த மற்றொரு மணி மகுடம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Sept 2023 4:54 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். குறிப்பாக இலங்கைக்கு எதிரான நேற்றைய முன் தினம் ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரில் இந்திய அணி தற்பொழுது சிறப்பாக விளையாடி வருகிறது. ஆசிய கிரிக்கெட் தொடர் என்பது உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப் படுகிறது. உலக நாடுகளின் அணிகளுடன் விளையாடுவதற்கு முக்கியமாக இது கருதப்படுகிறது.


முன்னதாக ரோகித் சர்மா இலங்கை வீரர் வீசிய பந்தை சிக்ஸர் அடித்து 23 ரன்கள் எட்டிய பொழுது சர்வதேச ஒரு நாள் போட்டியில் பத்தாயிரம் ரண்களை கடந்த 15 வது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இந்திய அளவில் ஆறாவது வீரர் என்ற பட்டியலில் தற்போது ரோகித் சர்மா இணைந்து இருக்கிறார். இதுவரை 248 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று அதில் 241 இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா தற்போது 30 சதம், 51 அரை சதம் உள்ளிட்ட 10 ஆயிரத்து 31 ரன்கள் எடுத்து இருக்கிறார்.


மேலும் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டியில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் இவர் பெற்றிருக்கிறார். விராட் கோலி பத்தாயிரம் ரன்களை தன்னுடைய 240 வது இன்னிங்ஸிலேயே எட்டிப் பிடித்து விட்டார். அந்த வகையில் அவர் முதலிடத்தில் இருக்கிறார் அதற்கு அடுத்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த இலக்கை அடைய 259 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டார். இதில் தற்போது ரோகித் சர்மா அவர்கள் 248 இன்னிங்ஸில் பத்தாயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News