பட்லரின் அதிரடி ஆட்டத்தால் வீழ்ந்தது இந்திய அணி.!
By : Pravin Kumar
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்துமுதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் (0), ரோஹித் சர்மா (15), இஷான் கிஷன் (4), ரிஷப் பண்ட் (25) மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் (9) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், இறுதி வரை நிலைத்து நின்று விளையாடிய இந்திய கேப்டன் விராட் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 156 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக் கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜேசன் ராய் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஜாஸ் பட்லர் இந்திய அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேவிட் மாலன் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஜாஸ் பட்லர் 52 பந்துகளில் 83 ரன்களும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய ஜானி பாரிஸ்டோ 40 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.